தடுப்பூசியின் அச்சம்… பிரதமருக்கு எதிரான அழுத்தம்

 

தடுப்பூசியின் அச்சம்… பிரதமருக்கு எதிரான அழுத்தம்

கொரோனா தடுப்பூசி போட்ட 24 மணி நேரத்தில் வார்டு பாய் மரணம் அடைந்திருக்கிறார். ஆனால், கொரோனா தடுப்பூசி காரணமில்லை என்று அரசு அறிவித்திருக்கிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்புக்காக தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்தியா முழுவதும் நேற்று முன் தினம் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது.

தடுப்பூசியின் அச்சம்… பிரதமருக்கு எதிரான அழுத்தம்

முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

நாடு முழுவதிலும் இதுவரை 2.24 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்திருக்கிறது. தமிழகத்தில் இதுவரைக்கும் 6 ஆயிரத்து 156 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்று அரசு தரப்பில் அறிவித்து வரும் நிலையில், கொல்கத்தாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 35வயதுடைய நர்ஸ்க்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மயக்கமடைந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தடுப்பூசியின் அச்சம்… பிரதமருக்கு எதிரான அழுத்தம்


மேலும், கொல்கத்தாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட 13 பேருக்கு பக்க விளைவுகள் இருந்ததாகவும், சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் குணமடைந்துள்ளதாகவும் தகவல்.

இந்நிலையில், உத்தரபிரதேசம் மாநிலம் மொரதாபாத் அரசு மருத்துவமனையின் வார்டு பாய் மஹிபால் சிங்(46) தடுப்பூசி போட்டுக் கொண்ட 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளார். இதனால் பதற்றம் உருவாகி இருக்கும் நிலையில், அவரது மரணத்திற்கும், தடுப்பூசிக்கும் சம்பந்தமில்லை என்று தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்திருக்கிறார். உத்தரபிரதேச அரசும் அதையே தெரிவித்திருக்கிறது.

ஆனாலும், கலக்கம் இருப்பதால் உடற்கூறு ஆய்வு முடிவினை எதிர் நோக்குகிறார்கள் மஹிபால் சிங் உறவினர்கள்.

நாடு முழுவதிலும் கொரோனா தடுப்பூசி குறித்த அச்சம் நிலவுவதால்தான், பிரதமர் மோடி முதலில் இந்த தடுப்பூசியை போட்டு நம்பிக்கை தந்திருக்க வேண்டும் என்கிற அழுத்தம் எழுந்திருக்கிறது.