தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த ஆட்டோ டிரைவர்

 

தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த ஆட்டோ டிரைவர்

நாம் இறந்து போய்விட்டால் என்ன நடக்கும்? எத்தனை பேர் நம்மை நினைத்துப் பார்ப்பார்கள்.. எத்தனை பேர் நமக்காக கூடுவார்கள்? எத்தனை பேர் நமக்காக கண்ணீர் சிந்துவார்கள். எத்தனை பேர் நம் இழப்பை நினைத்து வேதனைப் படுவார்கள் என்றெல்லாம் சிலருக்குத் தோன்றும். ஆனால் அந்த எண்ணத்தை அவர்கள் அப்படியே மறந்துவிடுவார்கள்.

தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த ஆட்டோ டிரைவர்

சிலர் தான் அதை நிறைவேற்றி விட நினைப்பார்கள். திரைப்பட பிரபலங்கள் சிலர் அப்படித்தான் தான் இறந்தால் எப்படி இருக்கும் என்பதை பார்க்க வேண்டும் என்பதற்காக தான் இறந்து விட்டதாக செய்தி பரப்ப, பலரு மாலையுடன் அலறிக்கொண்டு ஓடி வர, ஒரு கட்டத்திற்கு மேல் உண்மையை சொல்லி விட்டார் அந்த சினிமா பிரபலம்.

அப்படித்தான் சிலர் இதுமாதிரியான விஷப் பரீட்சையில் இறங்கியது உண்டு. தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அடுத்த ஆவுடையாபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மகாபிரபு இப்படி ஒரு விபரீதம் செய்து பார்த்திருக்கிறார்.

ஆட்டோ டிரைவரான மகாபிரபு, சவாரி கிடைக்காத நேரங்களில் வாட்ஸ் அப்பில் எந்நேரமும் மூழ்கி இருந்திருக்கிறார். புதுப்புது வீடியோ எடுத்த போட்டோக்களை எடுத்து அதை வாட்ஸ் அப்பில் ஷேர் செய்து வந்துள்ளார். திடீரென்று சவாரி இல்லாமல் உட்கார்ந்திருந்த அவருக்கு ஒரு யோசனை வந்திருக்கிறது. நாம் செத்துப்போனால் எத்தனை பேர் அனுதாபப்படுவார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்பி தனக்குத்தானே ஒரு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் தயாரித்து, அதை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஆக வைத்திருக்கிறார்.

அடுத்த நொடியே சக ஆட்டோ ஓட்டுனர்கள், அவருடன் படித்த நண்பர்கள் மாலையுடன் அஞ்சலி செலுத்த தயாராக இருந்திக்கிறார்கள். இது சும்மா டைம் பாஸுக்கு தான் இப்படி செய்தேன் என்று வாட்ஸப்பில் போட்டதும் எல்லோரும் அதிர்ந்து போய் இருக்கிறார்கள்.