’’மூன்றாவது குழந்தை பெற்றுக் கொண்டால் சிறையில் தள்ளணும்’’-கங்கனாவின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

 

’’மூன்றாவது குழந்தை பெற்றுக் கொண்டால் சிறையில் தள்ளணும்’’-கங்கனாவின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

கொரோனா இரண்டாவது அலை இந்திய மக்களை பெரும் இன்னலுக்கு ஆளாக்கி இருக்கிறது. இரவு நேர ஊரடங்கு, வார கடைசி தினத்தில் ஊரடங்கு என்று போய்க் கொண்டிருக்கிறது. பொதுப் போக்குவரத்துகளுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. மீண்டும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள் மக்கள்.

’’மூன்றாவது குழந்தை பெற்றுக் கொண்டால் சிறையில் தள்ளணும்’’-கங்கனாவின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

கொரோனாவின் வேகமும் அதிகரித்து வரும் நிலையில், ’’இயற்கையை நாம் அதிகமாக பாழடித்து விட்டோம். அதனால்தான் இந்த மோசமான விளைவுகளை சந்திக்கிறோம்’’ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்த நடிகை கங்கனா ரனாவத், ஒரு கட்டத்திற்கு மேல் மக்கள் தொகையைப் பற்றி பேச ஆரம்பித்தார்.

அதுவும் தடுப்பூசியில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. அப்படி இருந்தும் இரண்டாவது அலை அதிகரிக்க காரணம் மக்கள் தொகையும் ஒரு காரணம் என்ற கணக்கில் அவர் பேச ஆரம்பித்தார்.

‘’ நம் நாட்டு மக்கள் தொகை 130 கோடி என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இருக்கிறது. சட்டவிரோதமாக குடியேறிய 25 கோடி மக்களையும் சேர்த்துக் கொண்டால் 135 கோடி மக்கள் தொகையாகும். உலக அளவில் மக்கள் தொகையில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவை விட மூன்று மடங்கு நிலமும் வளமும் அதிகமாக இருக்கிறது அமெரிக்காவில். ஆனால் அந்த நாட்டில் மக்கள் தொகை வெறும் 32 கோடி தான். இந்தியாவிற்கு இணையாக சீனாவிலும் மக்கள் தொகை இருக்கிறது. ஆனால் இந்தியாவை விட சீனாவில் நிலமும் வளமும் மூன்று மடங்கு அதிகமாக இருக்கிறது.

’’மூன்றாவது குழந்தை பெற்றுக் கொண்டால் சிறையில் தள்ளணும்’’-கங்கனாவின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

இந்திய மக்கள் தொகை தான் அதிகம். அதனால் தான் இவ்வளவு மோசமான விளைவுகளை இந்தியா சந்தித்து வருகிறது. இந்தியாவின் மக்கள் தொகையை கருத்தில் கொண்டுதான் இந்திராகாந்தி கட்டாயமாக பல லட்சம் மக்களுக்கு கருத்தடை செய்தார். அவர் கொலை செய்யப்பட்டு விட்டார். இந்த தேசத்தை எப்படித்தான் கையாள்வது சொல்லுங்க? மக்கள் தொகையைக் கட்டுக்குள் வைக்க கடுமையான சட்டங்கள் கொண்டு வரவேண்டும். இந்த பிரச்சனையை கையில் எடுத்ததால் தான் இந்திராகாந்தி தேர்தலில் தோற்றார். பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் வேண்டும். மூன்றாவது குழந்தை பெற்றுக்கொண்டால் சிறையில் தள்ள வேண்டும் அல்லது அபராதம் விதிக்க வேண்டும்’’ என்று கடுமையாக கூறியிருந்தார். கங்கனாவின் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் வலுத்து வருகிறது.

https://twitter.com/KanganaTeam/status/1384525948046004224