மைய அரசின் இம்முடிவு அதிர்ச்சியளிக்கிறது… திருமாவளவன்

 

மைய அரசின் இம்முடிவு அதிர்ச்சியளிக்கிறது… திருமாவளவன்

சென்னையிலுள்ள நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஆந்திராவிற்கும் தெலங்கனாவிற்கும் மத்திய அரசு அனுப்பியுள்ளதாக தமிழ்நாடு அரசு குற்றஞ்சாட்டியுள்ளது பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

மைய அரசின் இம்முடிவு அதிர்ச்சியளிக்கிறது… திருமாவளவன்

இதுதொடர்பாகப் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழ்நாடு அரசிடம் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு 45 ஆயிரம் கிலோ ஆக்சிஜனை அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலங்கனாவிற்கு அனுப்பியிருக்கிறது. நாங்கள் எங்களுடைய அண்டை மாநிலத்தாருக்கு உதவுவோம். 2020ஆம் ஆண்டு கொரோனா பரவலின்போது நாங்கள் உதவியிருக்கிறோம். ஆனால் இப்போது தமிழ்நாடு இருக்கும் சூழ்நிலையும் மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். சுமார் 80 ஆயிரம் பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் தினமும் தமிழ்நாட்டிற்கு 200 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. ஆந்திரா(53,889), தெலங்கனாவை (42,859) ஒப்பிடுகையில் தமிழ்நாட்டிலேயே அதிகமானோர் சிகிச்சை பெறுகின்றனர். நாங்கள் நிச்சயமாக இந்த விவகாரத்தை மத்திய அரசிடம் முன்வைத்து தீர்வு காண்போம்”என்கிறார்.

ஆக்சிஜன் பற்றாக்குறையினால் வேலூர் மருத்துவமனையில் சிலர் உயிரிழந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் மத்திய அரசின் இந்த போக்கை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ‘’தமிழக அரசைக் கலந்தாலோசிக்காமல் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் 45 மெட்ரிக் டன் அளவு அண்டை மாநிலங்களுக்கு அனுப்ப மைய அரசு முடிவெடுத்துள்ளது. தமிழகத்திற்குப் போதிய ஆக்சிஜன் இல்லை என்கிற சூழலில் இம்முடிவு அதிர்ச்சியளிக்கிறது. இப்போக்கை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது’’என்று தெரிவித்துள்ளார்.