முதல்வர் கைக்கு சென்ற 4 ரிப்போர்ட்!

 

முதல்வர் கைக்கு சென்ற 4 ரிப்போர்ட்!

தனது உடல்நிலை, சிகிச்சை எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் தேர்தலுக்கு பிறகான கள நிலவரத்தை அறிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிக ஆர்வம் காட்டி வந்திருக்கிறார். அதனால் ஒரு இடத்தில் இருந்து மட்டுமல்லாமல் நான்கு இடத்திலிருந்து கள நிலவரத்தை கேட்டிருக்கிறார்.

முதல்வர் கைக்கு சென்ற 4 ரிப்போர்ட்!

முதல்வருக்கு நெருக்கமான அந்த முன்னாள் உளவுத்துறை ஐஜி தனி குழுவை வைத்து ஆய்வு செய்து ஒரு ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார். அந்த ரிப்போர்ட்டில் அதிமுகவுக்கு 120 சீட்டு கிடைக்கும் என்று அடித்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

மாநில அரசின் உளவுத் துறையிடம் இருந்து வந்த ரிப்போர்ட்டில் 85 சீட்டுகள் அதிமுகவுக்கு கிடைப்பது உறுதி. 40 தொகுதிகளில் இழுபறி இருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

மணியான அமைச்சர் ஒருவர் தனது ஏஜென்சி மூலம் ஆய்வு செய்து கொடுத்த ரிப்போர்ட்டில், உளவுத்துறை சொன்ன அந்த நாற்பது தொகுதிகளில் 20 சீட்டுக்கு மேல் அதிமுகவுக்கு உறுதி. அப்படிப் பார்த்தால் 110 சீட் அதிமுகவுக்கு நிச்சயம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

தவிர, முன்னதாகவே முதல்வருக்கு தேர்தல் வேலைகளை கவனித்து வந்த சுனில் கொடுத்த ரிப்போர்ட்டில், 90 இடங்கள் அதிமுகவுக்கு கிடைக்கும் என்பது உறுதி. 27 தொகுதிகள் இழுபறியில் உள்ளன . அதிலும் அதிமுகவுக்கு அதிக இடங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

4 ரிப்போர்ட்களிலும் உள்ள முடிவுகள் தனக்கு சாதகமாக இருப்பதால் உற்சாகத்தில் இருக்கிறார் முதல்வர் என்கிறது அதிமுக வட்டாரம்.