’’எங்கள் கட்சி தலைவர்களை கீழ்த்தரமாக பேசுவதை சீமான் தவிர்த்து வருகிறார்’’

’’எங்கள் கட்சி தலைவர்களை கீழ்த்தரமாக பேசுவதை சீமான் தவிர்த்து வருகிறார்’’

எங்கள் கட்சி தலைவர்களை கீழ்த்தரமாக பேசுவதை சீமான் தவிர்த்து வருகிறார் சீமான் என்றார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்.

’’எங்கள் கட்சி தலைவர்களை கீழ்த்தரமாக பேசுவதை சீமான் தவிர்த்து வருகிறார்’’

மைக் பிடித்து விட்டாலே எதிர்க்கட்சிகளை விளாசித்தள்ளிவிடுவார் நாம் தமிழர் கட்சி்யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். மூன்று புதிய வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பல விவகாரங்களில் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் சீமான். அதிமுக அரசின் தவறுகளை சுட்டுக்காட்டும் சீமான், திமுகவினரின் அராஜகங்களை கடுமையாக கண்டித்து வருகிறார்.

பாஜகவின் பி டீம் என்று சீமானை திமுகவினர் சொல்லி வரும் நிலையில், திமுகதான் பாஜகவின் மெயின் டீம் என்று பதிலடி கொடுத்து வருகிறார் சீமான்.

’’எங்கள் கட்சி தலைவர்களை கீழ்த்தரமாக பேசுவதை சீமான் தவிர்த்து வருகிறார்’’

இந்நிலையில், திருப்பதி பாராளூமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக சென்ற தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், செய்தியாளர்களிடம் பேசியபோது, பாஜகவினரை சீமான் கடுமையாக விமர்சித்து வருவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘’எங்கள் கட்சி தலைவர்களை சீமான் தற்போது கீழ்த்தரமாக பேசுவதை தவிர்த்து வருகிறார்’’ என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படுவதாக இருக்கும் குற்றச்சாட்டு இருக்கிறதே என்ற கேள்விக்கு, ‘’திமுக கட்சியினர் நடத்தும் பள்ளிகளில் கூட மூன்றாவது மொழியாக ஒரு மொழி கற்றுகொடுக்கப்படுகிறதே’’என்றார்.