தண்ணீர் என நினைத்து ஆசிட்டை… மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

 

தண்ணீர் என நினைத்து ஆசிட்டை… மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

சென்னை அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி சுமதி. செல்வத்தின் மாமியார் மேனகா(வயது60) இவர்களுடனேயே வசித்து வந்தார்.

மேனகா, கண் பார்வை குறைபாடு உள்ளவர். சர்க்கரை நோயாளி என்பதால் தினமும் அதற்கான மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார்.

தண்ணீர் என நினைத்து ஆசிட்டை… மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

சாப்பிட்டு முடித்த மேனகா, சர்க்கரை மாத்திரை சாப்பிடுவதற்காக தண்ணீரை தேடியிருக்கிறார். வீட்டில் அப்போது யாரும் இல்லை. அவரது கையில் பட்ட பாட்டிலை திறந்து தண்ணீர் என நினைத்து வாயில் ஊற்றுகொண்டார். உடனே நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு அலறி துடிக்கவும், பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தும் பலனின்றி இன்று உயிரிழந்தார்.

கண்பார்வை குறைவினால் தண்ணீர் என நினைத்து ஆசிட்டை குடித்து உயிரிழந்த மேனகாவை நினைத்து அப்பகுதி மக்கள் வருந்துகின்றனர்.