தஞ்சை பெரியகோயில் சித்திரை திருவிழா தொடக்கம்- 18நாள் கொண்டாட்டம்

 

தஞ்சை பெரியகோயில் சித்திரை திருவிழா தொடக்கம்- 18நாள் கொண்டாட்டம்

தஞ்சாவூர் பெரிய கோவிலின் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. ஆண்டுதோறும் இந்த சித்திரை திருவிழா 18 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். இது கொரோன காலம் என்பதால் சித்திரை திருவிழாவில் ஊர்வலம் கோயில் வளாகத்திற்குள்ளேயே 18 நாட்களும் நடைபெற இருக்கிறது. மேலும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெற இருந்தது. கொரோனாவின் காரணமாக அந்த தேரோட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

தஞ்சை பெரியகோயில் சித்திரை திருவிழா தொடக்கம்- 18நாள் கொண்டாட்டம்

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்டு ஆயிரத்து 10 ஆண்டுகள் ஆகிறது. 23 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி இந்த கோயிலில் குடமுழுக்கு விழா நடந்தது. கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று கொடி ஏற்றத்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் குறைந்த அளவிலேயே பக்தர்கள் பங்கேற்றனர்
.

தஞ்சை பெரியகோயில் சித்திரை திருவிழா தொடக்கம்- 18நாள் கொண்டாட்டம்

விழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் கடந்த மாதம் நடந்து முடிந்தது. கொடியேற்று விழாவை ஒட்டி நேற்று முன் தினம் வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. இந்த சித்திரை பெருவிழாவில் 18 நாட்களிலும் காலையில் திருமுறை விண்ணப்பம், மாலையில் திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கிருஷ்ணன், செயல் அலுவலர் மாதவன் மற்றும் அரண்மனை தேவஸ்தான பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெற இருந்தது ரத்து செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.