துரைமுருகன் விரைவில் நலம் பெற வாழ்த்துகிறேன்…கமல்

 

துரைமுருகன் விரைவில் நலம் பெற வாழ்த்துகிறேன்…கமல்

கொரோனா வைரஸின் இரண்டாம் அலை மின்னல் வேகம் எடுத்துள்ளதால், சினிமா பிரபலங்களும், அரசியல்வாதிகளும், விளையாட்டு வீரர்களும் அதிகம் தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள்.

துரைமுருகன் விரைவில் நலம் பெற வாழ்த்துகிறேன்…கமல்

முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகைகள் ராதிகாவுக்கும், நக்மாவுக்கும் கொரோனா வந்திருப்பதி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

துரைமுருகன் விரைவில் நலம் பெற வாழ்த்துகிறேன்…கமல்

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “கேரள முதல்வர் நண்பர் பினராயி விஜயன், சமத்துவ மக்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் தோழி ராதிகா சரத்குமார் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்தேன். 4 நாட்கள் முன்புவரை தேர்தல் களத்தில் பரபரப்பாக இருந்தவர்கள். முன்னெச்சரிக்கைகளையும் மீறித் தாக்குகிறது கொரோனா. இவர்கள் விரைவில் நலம்பெற்று மக்கள் பணிக்குத் திரும்ப வாழ்த்துகிறேன். நோய்த்தாக்குதலுக்கு ஆட்படாதவர்கள் அலட்சியம் தவிர்க்க வேண்டும். ஆபத்தை உணரவேண்டும். நான் உள்பட” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும், ‘’திமுக பொதுச்செயலாளர் நண்பர் துரைமுருகன் கொரானா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்தேன். அவர் விரைவில் நலம் பெற வாழ்த்துகிறேன்.’’என்று தெரிவித்துள்ளார்.