சீரடியில் தரிசனம் முழுவதும் ரத்து; திருப்பதியில் இலவச தரிசனம் ரத்து

 

சீரடியில் தரிசனம் முழுவதும் ரத்து; திருப்பதியில் இலவச தரிசனம் ரத்து

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டிக்கெட்டை ரத்து செய்து அறிவித்திருக்கிறது தேவஸ்தானம்.

சீரடியில் தரிசனம் முழுவதும் ரத்து; திருப்பதியில் இலவச தரிசனம் ரத்து

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப் படைத்த நேரத்தில் திருப்பதி தேவஸ்தானம் இழுத்து மூடப்பட்டது. கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்த பின்னரே கடும் கட்டுப்பாடுகளுடன் திருப்பதி கோவில் திறக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி முதல் இலவச தரிசன டிக்கெட்டை ரத்து செய்து அறிவித்திருக்கிறது தேவஸ்தானம்.

சீரடியில் தரிசனம் முழுவதும் ரத்து; திருப்பதியில் இலவச தரிசனம் ரத்து

ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டிக்கெட்டுகள் கடந்த ஒருவாரமாக 23 ஆயிரம் டிக்கெட்டுகளில் இருந்து 15 ஆயிரமாக குறைக்கப்பட்டது. தொற்றின் காரணமாக இந்த எண்ணிக்கை குறைக்கப்பட்டது. அப்படி இருந்தும் ஆந்திராவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆகவே மகாராஷ்டிரா மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அம்மாநிலத்தில் உள்ள சீரடி சாய்பாபா கோவில் மூடப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டிருக்கிறது.

சீரடியில் தரிசனம் முழுவதும் ரத்து; திருப்பதியில் இலவச தரிசனம் ரத்து

இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் முதற்கட்டமாக இலவச தரிசன டிக்கெட்டை ரத்து செய்திருக்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மட்டுமே இந்த இலவச டிக்கெட்டுகள் அனுமதிக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் இந்த இலவச தரிசன டிக்கெட் வழங்கும் கவுண்டர்கள் இழுத்து மூடப்பட்டு விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஒட்டுமொத்தமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்காமல், மூடி விடாமல் படிப்படியாக பக்தர்களின் வருகையை குறைத்து வருகிறது தேவஸ்தானம்.