நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு என் பலத்தை காட்டுவேன்; டி.ராஜேந்தர்

நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு என் பலத்தை காட்டுவேன்; டி.ராஜேந்தர்

பிரபல திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர் இன்று சென்னை தி.நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் அவரை செய்தியாளர்கள் சந்தித்தபோது, ‘’வாக்குச்சாவடி லிஸ்டில் நடிகர் டி.ராஜேந்தர்&குடும்பத்தினர் என்று உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு என் பலத்தை காட்டுவேன்; டி.ராஜேந்தர்

நான் லட்சிய திமுக என்ற கட்சியை நடத்தி வருகிறேன். என் கட்சியை போட்டு கட்சி தலைவர் என்று போடவில்லை என்பதற்காக நான் வருத்தப்படவில்லை. வாக்கு சதவிகிதத்தை காட்டினால்தான் இங்கே கட்சிகளுக்கு மதிப்பு இருக்கிறது. அதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எனது கட்சி தனித்து போட்டியிடும். அந்த தேர்தலில் என் வாக்கு பலத்தை காட்டுவேன்’’என்றார்.

நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு என் பலத்தை காட்டுவேன்; டி.ராஜேந்தர்

வாக்குப்பதிவு எந்திரத்தில் நோட்டா சின்னம் தெளிவாக இல்லை. எல்லோரும் தேட வேண்டிய அளவுக்கு இருக்கிறது. தேர்தல் ஆணையம் நோட்டோவை இப்படி வைத்திருக்கிறது. மக்களிடத்திலும் ஏன் அதுபற்றி விழுப்புணர்வினை ஏற்படுத்தவில்லை என்று தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தினார்.

கொரோனா காலத்தில் மக்களுக்கு செய்யாதவற்றை எல்லாம் தேர்தல் அறிவிப்புகளாக கொடுக்கிறார்கள். ஏன் இப்படி மக்களை ஏமாற்றுகிறார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.