“மனைவிக்கு மது ஊற்றி கொடுத்து; மகனின் கண்முன்னே” நண்பர்களுடன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கணவர் கைது!

பெண்ணின் புகாரின் அடிப்படையில் அவரின் கணவர் மற்றும் அவரின் நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 25 வயது பெண்ணிற்கு அந்த பெண்ணின் கணவரே மது கொடுத்து தனது நண்பர்களுடன் அந்த பெண்ணை கூட்டு  பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் படி, “என்னையும் என் இரு குழந்தைகளையும் என் கணவர் புதுக்குறிச்சி கடற்கரை அருகேயுள்ள ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு எனக்கு மதுகொடுத்து என 5 வயது மகன் கண்முன்னே தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து என்னை வன்கொடுமை செய்தார் என்று குறிப்பிட்டுள்ளார். அந்த பெண்ணின் புகாரின் அடிப்படையில் அவரின் கணவர் மற்றும் அவரின் நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பாதிக்கப்பட்ட பெண், ” என் கணவர் என்னை பல முறை துன்புறுத்தியுள்ளார். அவர் நண்பர்களிடம் பணம் வாங்கி கொண்டு தான் இந்த செயலில் ஈடுபட்டார். நான் அங்கிருந்து தப்பித்து சாலைக்கு சென்றேன். அப்போது அந்த வழியே வந்த ஒருவர் என்னை காப்பாற்றி அவரின் வீட்டுக்கு அழைத்து சென்றதுடன் போலீசுக்கும் தகவல் கொடுத்தார்” என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Most Popular

வாழ்த்து சொல்வதற்காகவா டெல்லி சென்றார் கு.க.செல்வம்?

தலைமை மீதிருந்த அதிருப்தியினால் திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் டெல்லி்யில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்ததாக தகவல் வெளியான நிலையில், தான் பாஜகவில் இணையவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார் செல்வம். பின்னர் எதற்காக...

சென்னையில் ஒரு லட்சத்து 4,027 பேருக்கு கொரோனா! மாவட்ட வாரியான ரிப்போர்ட்!!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 5,063 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர்...

30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறுவை நெல் சாகுபடியில் சாதனை படைத்த தமிழக அரசு!

தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.87 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டிருப்பது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் சாதனையாக கருதப்படுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த...

தமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறானது – அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறானது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “கொரோனாவால் பாதிக்கப்பட்ட 77.8% குணமடைந்துள்ளனர். உயிர்காக்கும் மருந்துகள் தமிழகத்தில்...