24 மணிநேரம் தியேட்டர் திறக்குறது சரி. யாருவந்து பார்க்கப்போறாங்க?

24 மணிநேரம் தியேட்டர் திறக்குறது சரி. யாருவந்து பார்க்கப்போறாங்க?

ஆசை இருக்குதாம் அரசாள, அதிர்ஷ்டம் இருக்குதாம் ஆடுமேய்க்க என்கிற கதையாக, நாளுக்கு நாலு ஷோ போடும்போதே தியேட்டர்கள் காத்து வாங்குகின்றன, இதில் 24 மணி நேரமும் படம் போட்டால் யார் பார்ப்பது என நாங்க கேக்கலீங்கோ, கேட்கவேண்டிய ஆட்களே கேட்கிறார்கள். தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் செல்வின் ராஜ்தான் இந்த லாஜிக்கான கேள்வியைக் கேட்டிருக்கிறார்.

செல்வின்ராஜ்

“தியேட்டர்களில் தினமும் திரையிடும் நான்கு காட்சிகளுக்கே ரசிகர்கள் அதிகம் வருவது இல்லை. புதிய படங்களின் ஓப்பனிங் காட்சிகளில்கூட இருக்கைகள் காலியாக தான் இருக்கிறது. பிரபல ஹீரோக்களின் படம் முதல் மூன்று நாட்கள் தான் அரங்கு நிறைந்த காட்சியாக ஓடுகிறது. மின்சார செலவு, ஊழியர்களுக்கு சம்பளம், என கணக்கிட்டால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு லாபம் கிடைக்காது. எனவே, 24 மணி நேரமும் படம் ஓட்டுவது சாத்தியமில்லை” என அவர் தெரிவித்துள்ளார். ஊட்டியில 100 ஏக்கர் டீ எஸ்டேட் இருக்கலாம். ஆனால் டீ எஸ்டேட் யார் பெயரில் இருக்கிறது என்பதுதான் முக்கியம். அதுபோல, 24 மணி நேரமும் தியேட்டர்களை திறந்துவைக்கலாம், யார் வந்து பாக்குறது?