24 எம்.பி செல்ஃபி கேமரா, 6.4 இன்ச் டிஸ்பிளே கொண்ட விவோ X21s ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம்

 

24 எம்.பி செல்ஃபி கேமரா, 6.4 இன்ச் டிஸ்பிளே கொண்ட விவோ X21s ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம்

சீனாவில் விவோ X21s ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பெய்ஜிங்: சீனாவில் விவோ X21s ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விவோ நிறுவனம் தனது எக்ஸ் சீரிஸ் ரக ஸ்மார்ட்போன்கள் வரிசையில் புதிய மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போனை சீனாவில் சைலன்ட்டாக அறிமுகம் செய்துள்ளது. அந்த ஸ்மார்ட்போன் ‘விவோ X21s’ ஆகும். இது கிட்டத்தட்ட விவோ வி11 ப்ரோ ஸ்மார்ட்போன் உடன் பல விஷயங்களில் ஒத்துப் போகிறது. இதன் முக்கிய சிறப்பம்சங்களாக 6 ஜிபி ரேம், இன்-டிஸ்பிளே விரல்ரேகை சென்சார், நீர்த்துளி வடிவிலான நாட்ச் கொண்ட பேஸல்-லெஸ் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 660 பிராஸசர் ஆகியவை உள்ளன.

vivo9

விவோ X21s சிறப்பம்சங்கள்:

– 6.41 இன்ச் ஃபுல் எச்.டி டிஸ்பிளே

குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 ப்ராஸசர்

– 6 ஜிபி ரேம்

– 128 ஜிபி இன்டெர்னல் மெமரி

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம்

– 12 எம்.பி + 2 எம்.பி இரட்டை பின்பக்க கேமரா, எல்இடி ஃபிளாஷ்

– 24.8 எம்.பி செல்ஃபி கேமரா

டூயல் சிம் ஸ்லாட்,

இன்-டிஸ்பிளே விரல்ரேகை சென்சார்

டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத்

– 3400 எம்.ஏ.எச் பேட்டரி

vivo8

புதிய விவோ X21s ஸ்மார்ட்போன் சிங்கிள் ஸ்டேரி நைட் பிளாக் நிறத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இதன் விலை சீனாவில் 2,498 யுவான் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.26,100) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.