Home அரசியல் இன்னும் ஒரு நாள்... கள இறுதி நிலவரம் இதுதான்!

இன்னும் ஒரு நாள்… கள இறுதி நிலவரம் இதுதான்!

இன்னும் ஒருநாள்தான் இருக்கிறது. நாளை மறுதினம் காலையில் வாக்குப்பதிவு தொடங்கிவிடும். அதுவும் தேர்தல்பிரச்சாரம் இன்று மாலை 7 மணியுடன் ஓய்வு பெறுவதால் பிரச்சாரக்களம் அனல்பறக்கிறது.

இன்னும் ஒரு நாள்... கள இறுதி நிலவரம் இதுதான்!
இன்னும் ஒரு நாள்... கள இறுதி நிலவரம் இதுதான்!

அதிமுகதான் திமுகதான் என்று ஒவ்வொரு கருத்துக்கணிப்புகளும் ஒவ்வொரு மாதிரி இருப்பதால் இது கருதுக்கணிப்பா? இல்லை கருத்து திணிப்பா? என்றே மக்கள் குழம்பிப்போயிருக்கிறார்கள்.

ஆனால், அடித்தட்டு மக்களுக்கு இந்த கணிப்பு கணக்கு எல்லாம் தெரியவில்லை. ’’திமுகதானே வரும்னு நிறைய கருத்துக்கணிப்புகள் சொல்லுது?’என்று திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு மூத்த பெண்மணியிடம் கேட்டபோது, ‘அதிமுகதானே வரும்னு இங்க எல்லோரும் சொல்லிக்கிறாங்க. நீங்க என்ன இப்டி சொல்றீங்க தம்பி…’’என்று இழுத்தவரிடம்,

இன்னும் ஒரு நாள்... கள இறுதி நிலவரம் இதுதான்!

‘’ஏன் அதிமுகதான் வருதுன்னு எல்லோரும் சொல்றாங்க?’’என்று கேட்டதற்கு, ‘’அதிமுகதானே நிறைய சலுகைகள் அறிவிச்சிருக்குது. மாசா மாசாம் 1500 ரூபாய் கொடுக்குறதா சொல்லியிருக்காங்க. ஸ்டாலின் ஆயிரம் ரூபாதான தர்றேன்னு சொன்னாரு. ஆறு கேஸ்சிலிண்டர் இலவசமாக தர்றேன்னு சொல்லியிருக்காங்க. ஆனா, ஸ்டாலின் 100 ரூபா மானியம் தர்றதா தானே சொன்னாரு..’’என்றார்.

கருத்துக்கணிப்புகள் தான் திமுகவுக்கு சாதகமாக இருக்குதே தவிர, கள நிலவரம் அதிமுகவுத்தான் இப்படி சாதகமாக இருக்கிறது.

மாநிலம் தழுவிய அளவில் பல்வேறு தரப்பினரிடம் பேசியதிலிருந்து கிடைத்த தகவல்களின்படி, தெற்கு தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் அதிமுக வலுவான நிலையில் உள்ளது. வடக்கு, மேற்கு, கொங்கு டெல்டா மண்டலங்களில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் இரட்டை இலைதான் முன்னிலை வகிக்கிறது.

மக்களிடம் அதிமுகவிற்கு சாதகமான நிலை நிலவுவதற்கு தமிழக அரசின் நலத்திட்டங்கள், பொங்கல் பரிசு, கொரோனா நிவாரணம் என பல காரணங்கள் இதன் பின்னணியில் உள்ளன. ஆர்ப்பாட்டம் இல்லாத முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் எளிய பிரச்சாரம் கூடுதல் பிளஸ் பாயிண்ட். அத்துடன் கோஷ்டி பூசலுக்கு இடமின்றி அதிமுகவினர் ஒற்றுமையாக உழைப்பது இரட்டை இலையை உயரச் செய்திருக்கிறது.

இன்னும் ஒரு நாள்... கள இறுதி நிலவரம் இதுதான்!

இந்த ஒற்றுமையை திமுக அணியில் பார்க்க முடியவில்லை. சொந்த கட்சிக்குள் மட்டுமின்றி கூட்டணி கட்சிகளுடனும் திமுகவினர் குஸ்திபோடும் நிலைதான் காணப்படுகிறது.

மேலும், ஆ.ராசா, தயாநிதி மாறன், திண்டுக்கல் லியோனி போன்ற திமுகவினரின் ஆபாச பேச்சுக்களால் திமுகவிற்கு கிடைக்க வேண்டிய பெண்கள் வாக்குகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆக மொத்தத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையிலான அதிமுக அணி ஹாட்ரிக் சாதனை படைக்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதையே உறுதிப்படுத்துகிறது கள இறுதி நிலவரம்.

இன்னும் ஒரு நாள்... கள இறுதி நிலவரம் இதுதான்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸில் காத்திருந்த 6 பேர் பலி!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் படுக்கைக்காக ஆம்புலன்சில் காத்திருந்தவர்களில் 6 பேர் உயிரிழந்தார். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மொத்தமுள்ள...

ரொம்ப டேஞ்சரஸ்..ஆவி புடிச்சுகிட்டு இருக்கேன்…நடிகர் செண்ட்ராயன்

நடிகர் செண்ட்ராயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து அவர்...

விடுதலைப்புலிகளை வெளிப்படையாக ஆதரித்து பல எதிர்வினைகளும், எதிர்ப்புகளும் வந்தபோதும்… சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ’’தமிழ்த்தேசிய சிந்தனையாளரும், சமூகநீதி போராளியுமான பெருமதிப்பிற்குரிய அருட்தந்தை ஜான் சுரேசு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மறைவுற்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், மனக்கவலையும் அடைந்தேன். அவரது...
- Advertisment -
TopTamilNews