அதிமுகவா? திமுகவா? வைரலாகும் புதிய தலைமுறை குழுமத்தின் கருத்துக்கணிப்பு முடிவுகள்

 

அதிமுகவா? திமுகவா? வைரலாகும் புதிய தலைமுறை குழுமத்தின் கருத்துக்கணிப்பு முடிவுகள்

சட்டமன்ற தேர்தல்-2021ஐ முன்னிட்டு, எந்த கூட்டணி வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு நடத்த, தமிழகத்தை ஐந்து மண்டலங்களாக பிரித்து 234 தொகுதிகளில் ஒரு வாக்குச்சாவடிக்கு 20 பேர் என்கிற அடிப்படையில் 2 ஆயிரத்து 900 வாக்குச்சாவடிகளின் வாக்காளர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி இருக்கிறது புதிய தலைமுறை குழுமத்தின் புதுயுகம் தொலைக்காட்சி.

அதிமுகவா? திமுகவா? வைரலாகும் புதிய தலைமுறை குழுமத்தின் கருத்துக்கணிப்பு முடிவுகள்

மாநில அளவில் அதிமுக கூட்டணி 44 சதவிகித வாக்குகளை பெறும் என்றும், திமுக கூட்டணி 42 சதவிகித வாக்குகளை பெறும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

மேலும், தொகுதிகளின் அடிப்படையில் அதிமுக கூட்டணி 131 இடங்களில் வெற்றி பெறும் என்றும், திமுக கூட்டணி 102 இடங்களில் வெற்றி பெறும் என்றும், மற்றவை-1 என்றும் புதுயுகத்தின் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

அதிமுகவா? திமுகவா? வைரலாகும் புதிய தலைமுறை குழுமத்தின் கருத்துக்கணிப்பு முடிவுகள்

இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள்தான் தேர்தலில் எதிரொலிக்குமோ என்கிற ரீதியாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.