சசிகலாவின் ராமேஸ்வரம் விசிட்!

 

சசிகலாவின் ராமேஸ்வரம் விசிட்!

சசிகலா விடுதலையாகி சென்னை வந்தபோதே அவர் மனநிம்மதிக்காக தமிழகம் முழுவதும் கோவில் கோவிலாக சென்று வரப்போகிறார் என்று செய்திகள் வந்தன. அதுமாதிரியே அவர் முதலில் குலதெய்வம் கோவிலில் ஆரம்பித்து பின்னர் ஒவ்வொரு கோவிலாக சென்று வணங்கி வருகிறார்.

சசிகலாவின் ராமேஸ்வரம் விசிட்!

ராமேஸ்வரம் ராமநாதாசாமி கோவிலில் தரிசனம் செய்வதற்காக சசிகலா இன்று ராமநாதபுரம் சென்றார். மாவட்டத்தின் எல்லையில் ராமநாதபுரம் அமமுக வேட்பாளர் முனியசாமியும், திருவாடானை அமமுக ஆனந்த் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். அப்போது ராமேஸ்வரம் அமமுக நிர்வாகிகள் சசிகலாவுக்கு குருத்தோலை வழங்கி வரவேற்றனர்.

சசிகலாவின் ராமேஸ்வரம் விசிட்!

நாளை காலை ராமேஸ்வரம் கோயிலில் நடைபெற இருக்கும் ஸ்படிக லிங்க பூஜையில் சசிகலா பங்கேற்று, ராமநாதசாமி – பர்வதவர்த்தினி அம்மாளூக்கு சிறப்பு பூஜைகள் செய்கிறார் சசிகலா. இதற்காகத்தான் அவர் இன்றே சென்று தங்கியிருக்கிறார் என அமமுகவினர் தெரிவித்துள்ளனர்.