சுவர் ஏறி குதித்து தப்பிச் சென்ற ஆசிரியர்கள்!

 

சுவர் ஏறி குதித்து தப்பிச் சென்ற ஆசிரியர்கள்!

தேர்தல் வாக்குப்பதிவு பணியிலும், வாக்கு எண்ணிக்கை பணியிலும் ஆசிரியர்கள்தான் அமர்த்தப்படுகிறார்கள். இதற்காக அவர்கள் பயிற்சி வகுப்படு நடத்தப்படுவது வழக்கம்தான். இந்த பணிக்காக அவர்களுக்கு சிறப்பு ஊதியமும் உண்டு.

சுவர் ஏறி குதித்து தப்பிச் சென்ற ஆசிரியர்கள்!

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களூக்கான பயிற்சி வகுப்பு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. காலை9.30 மணிக்கு தொடங்கி மாலை வரை இந்த பயிற்சி வகுப்பு நடைபெறூம் என்று முன்னரே தெரிவித்திருந்தனர். அதன்படியே நேற்று அனைவரும் பயிற்சி வகுப்பிற்கு வந்திருந்தனர்.

மதிய உணவு அங்கேயே பொட்டலமாக வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் சில உணவுப்பொட்டலங்களை வாங்கிவிட்டு வெளியே செல்ல முயன்றன. சிலர் வெளியே சென்று சாப்பிட்டுவிட்டு வருவதாக சொல்லி புறப்பட்டனர்.

சுவர் ஏறி குதித்து தப்பிச் சென்ற ஆசிரியர்கள்!

உணவு இடைவேளைக்கு பின்னர் ஒரு மணி நேரம் பயிற்சி வகுப்பு இருக்கிறது. அதனால் அதை முடித்துவிட்டு போகலாம் என்றூ அதிகாரிகள் சொல்லிப்பார்த்தும் சிறுவர்கள் போல் அடம்பிடித்ததால், வாசல் கேட்டுக்கு பூட்டு போட்டனர்.

மதியத்திற்கு மேல் பயிற்சி வகுப்பில் இருக்க பிடிக்காமல் ஆசிரியர்கள்,ஆசிரியைகள் சிலர் சுவர் ஏறி குதித்து தப்பிச்சென்றனர். எங்களுக்கும் எல்லாம் தெரியும் என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டனர்.

இந்நிலையில், வரும் 3ம் தேதி இரண்டாம் கட்ட பயிற்சியும், 5ம் தேதி மூன்றாம் கட்ட பயிற்சியும் இருக்கிறது. அதற்குள் சுவர் ஏறி குதித்து ஓடிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றார்கள்.