234 தொகுதியிலும் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பம்.. ஈவிகேஸ் குற்றச்சாட்டு

234 தொகுதியிலும் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பம்.. ஈவிகேஸ் குற்றச்சாட்டு

கொளத்தூர், சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி, திருவண்ணாமலை உள்ளிட்ட ஐந்து தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளார். இந்த தொகுதிகளில் திமுகவினரால் பணப்பட்டுவாடா அதிகம் நடந்துள்ளது என்றுதான் ஜெயக்குமார் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

234 தொகுதியிலும் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பம்.. ஈவிகேஸ் குற்றச்சாட்டு

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஸ். இளங்கோவன், ‘’ஐந்து தொகுதிகளில் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று அதிமுக தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்திருப்பது அவர்களின் தோல்வி பயத்தை காட்டுகிறது. ஐந்து தொகுதிகளில் மட்டுமல்ல 234 தொகுதிகளிலும் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பமாக இருக்கிறது’’என்று தெரிவித்துள்ளார்.

234 தொகுதியிலும் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பம்.. ஈவிகேஸ் குற்றச்சாட்டு

அவர் மேலும், ‘’தமிழகம் முழுவதும் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்ததை பார்க்கும்போது திமுக-காங்கிரஸ் கூட்டணிதான் 234 தொகுதிகளிலும் வெற்றிபெறும்’’என்று தெரிவித்துள்ளார்.