‘234 தொகுதிகளில் சைலண்டா இருக்கணும்; 2021 -இல் நாங்க தான் இருக்கணும்’ விஜய் ரசிகர்களின் அலப்பறைகள்!

 

‘234 தொகுதிகளில் சைலண்டா இருக்கணும்;  2021 -இல் நாங்க தான் இருக்கணும்’  விஜய் ரசிகர்களின் அலப்பறைகள்!

2021 நாங்க தான் இருக்கணும் மக்கள் பணி செய்ய வரும் மாஸ்டர் மாண்புமிகு தளபதி விஜய்’ என்று அச்சடிக்கப்பட்டுள்ளது.

பிகில் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  நடிகர் விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். விஜயின் 64-வது படமான இந்தப்  படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி ஆகியோரும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு தற்போது  கர்நாடகாவில் உள்ள சிறைச்சாலையில் நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்க இருக்கின்றன. வரும் ஏப்ரல் மாதத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மாஸ்டர் படம்  திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதனிடையே நேற்று முன்தினம் மாலை மாஸ்டர் படத்தின் இரண்டாவது லுக் வெளியாகி நல்ல வரவேற்பை  பெற்றது.

ttn

இந்நிலையில்  சென்னை ஆதம்பாக்கம் விஜய் ரசிகர்கள் சிலர் மாஸ்டர் செகண்ட் லுக் புகைப்படத்தை வைத்து  போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர். அதில், ‘234 தொகுதிகளில் சைலண்டா இருக்கணும் 2021  -இல் நாங்க தான் இருக்கணும் மக்கள் பணி செய்ய வரும் மாஸ்டர் மாண்புமிகு தளபதி விஜய்’ என்று அச்சடிக்கப்பட்டுள்ளது.

ttn

ஒருபுறம் ரஜினி ரசிகர்கள் தலைமை செயலகம் போன்ற செடீ அமைத்து தர்பார் கொண்டாட்டத்தின் போது  அரசியல் செய்த நிலையில், தற்போது விஜய் ரசிகர்களும் விஜய்யை தெருவுக்கு இழுக்கும் பணிகளில் மும்முரமாகச் செயல்பட்டு வருவதாக நெட்டிசன்கள் கருத்து  கூறி வருகிறார்கள்.