அடுக்குமாடி குடியிருப்பை கொரோனா வார்டாக மாற்றும் அதிகாரிகள்; அம்பத்தூரில் பரபரப்பு

அடுக்குமாடி குடியிருப்பை கொரோனா வார்டாக மாற்றும் அதிகாரிகள்; அம்பத்தூரில் பரபரப்பு

சென்னையில் அம்பத்தூர் அருகே அத்திபேடுவில் தமிழ்நாடு அரசு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 19 மாடி கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 11 பிளாக் உள்ளன. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் பாதி வீடுகள் விற்றுவிட்டன. விற்பனை ஆகாத வீடுகள் உள்ளன. அதனால், இந்த குடியிருப்பில் மூன்று பிளாக்குகளை கொரோனா வார்டாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

அடுக்குமாடி குடியிருப்பை கொரோனா வார்டாக மாற்றும் அதிகாரிகள்; அம்பத்தூரில் பரபரப்பு

இந்த அடுக்குமாடியில் குடியிருப்போரும், வாடகைக்கு இருப்போரும் கொரோனா வார்டாக மாற்ற கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அந்த ஏரியா மக்களும், அருகில் இருக்கும் ஐ.சி.எப். காலணி மக்களூம் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தி வருகிறார்கள்.

அடுக்குமாடி குடியிருப்பை கொரோனா வார்டாக மாற்றும் அதிகாரிகள்; அம்பத்தூரில் பரபரப்பு

கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், தொற்று எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிவிட்ட நிலையில், அரசு மருத்துவமனைகள் நிறைய இருக்க, ஒரு அடுக்குமாடி குடியிருப்பினை கொரோனா வார்டாக மாற்ற வேண்டிய அவசியம் என்ன? அந்த அளவுக்கு தொற்று பரவல் அதிகமாகிவிட்டதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.