எலெக்‌ஷன் முடிஞ்சதும் லாக் டவுனா? ரிசல்ட் வந்ததும் பட்டாசு வெடிக்க முடியாதா?

 

எலெக்‌ஷன் முடிஞ்சதும் லாக் டவுனா? ரிசல்ட் வந்ததும் பட்டாசு வெடிக்க முடியாதா?

கொரோனா இரண்டாவது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. ஆயிரத்திற்கு கீழ் இருந்த தொற்று உறுதி ஆயிரத்தை தாண்டி அதிரவைத்திருக்கிறது.

எலெக்‌ஷன் முடிஞ்சதும் லாக் டவுனா? ரிசல்ட் வந்ததும் பட்டாசு வெடிக்க முடியாதா?

கொரோனா தாக்கம் குறைந்துவிட்டது என்று மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி இருக்கும் நிலையில், மீண்டும் பழைய நிலைமை திரும்பியிருப்பது மக்களை ஆச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

தடுப்பூசி வந்துவிட்டதால் மக்கள் ரொம்பவே அலட்சியமாக இருந்துவிட்டனர். மாஸ்க் அணிவதில்லை. சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை. இதன் காரணமாகவே குறைந்திருந்த தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

எலெக்‌ஷன் முடிஞ்சதும் லாக் டவுனா? ரிசல்ட் வந்ததும் பட்டாசு வெடிக்க முடியாதா?

கொரோனா தடுப்பு விதிகளை முன்பு போலவே மக்கள் கடைப்பிடித்து வந்தால்தான், தடுப்பூசியையும் போட்டுக்கொண்டால்தான் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையினை கட்டுப்படுத்தலாம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் அதிகமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் கொரொனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் பெரும் அச்சத்தில் இருக்கிறார்கள்.

இதனால் மீண்டும் லாக் டவுன் போடப்படுவதாக ஒரு தகவல் பரவ, மத்திய -மாநில அரசுகள் அதை மறுத்துள்ளன. லாக்டவுன் போடாமலேயே இரண்டாவது அலையை கட்டுப்படுத்தாம் என்கின்றன.

எலெக்‌ஷன் முடிஞ்சதும் லாக் டவுனா? ரிசல்ட் வந்ததும் பட்டாசு வெடிக்க முடியாதா?

தேர்தல் பிரச்சாரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கூடுவதில் சமூக இடைவெளியினை பின்பற்ற வாய்ப்பில்லை. வேட்பாளர்கள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. அப்படியானால் அவர்களுடன் பணிபுரிந்தவர்களுக்கும், அவர்கள் பிரச்சாரத்தில் பங்கேற்றவர்களுக்கும் நிச்சயம் தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்ற அச்சமும் நிலவுகிறது.

இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மாஸ்க், சமூக இடைவெளி அவசியம் என்று மருத்துவர்கள் ஒருபக்கம் அறிவிறுத்த, தேர்தல் ஆணையமோ அதுகுறித்து எதுவும் சொல்லவே இல்லை. கொரோனாவால் லாக் டவுன் போடப்படுகிறது. தேர்தல் தள்ளிப்போகிறது என்று வரும் தகவல்களுக்கு மட்டும் மறுப்பு தெரிவித்துள்ளனர் தேர்தல் அதிகாரிகள். திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

எலெக்‌ஷன் முடிஞ்சதும் லாக் டவுனா? ரிசல்ட் வந்ததும் பட்டாசு வெடிக்க முடியாதா?

இதனால் மக்களிடையே ஒரு சந்தேகம் எழுந்திருக்கிறது. எலக்‌ஷன் என்பதால் லாக் டவுன் போட்டால் ஐந்து மாநில தேர்தலும் பாதிக்கப்படும். மீண்டும் தேர்தல் நடத்த ஏகப்பட்ட செலவாகும். மக்களும் அச்சப்பட்டு ஓட்டு போட வரமாட்டார்கள். அதனால் எலக்‌ஷன் முடிஞ்சதும் லாக் டவுன் போடப்போகிறார்கள் என்றே சந்தேகம் எழுந்திருக்கிறது.

அனேகமாக தேர்தல் முடிவுகள் அன்று லாக் டவுனால் வீட்டுக்குள்ளேயே இருந்துதான் வேட்பாளர்களும் முடிவுகளை தெரிந்துகொள்ள வேண்டும் போலிருக்கிறது. ஜெயித்தவர்கள் கூட பட்டாசு வெடிக்க முடியாது போலிருக்கிறது என்றும் பேச்சு எழுகிறது.