’’சினிமா உள்ளவரை நீயும் வாழ்ந்து குடும்ப நாயகனாக வழி காட்டிக் கொண்டிருப்பாய் நண்பா’’

 

’’சினிமா உள்ளவரை நீயும் வாழ்ந்து குடும்ப நாயகனாக வழி காட்டிக் கொண்டிருப்பாய் நண்பா’’

விசு நீண்டகாலம் நினைக்கப்படுவார் என்று கடந்த ஆண்டு இதே தினத்தில் கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்திருந்தார். மறைந்த பன்முகக்கலைஞர் விசுவின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று.

’’சினிமா உள்ளவரை நீயும் வாழ்ந்து குடும்ப நாயகனாக வழி காட்டிக் கொண்டிருப்பாய் நண்பா’’

விசு… என்றும் என் நினைவில் நீ. ஓராண்டு ஓடிவிட்டது. உன் வசனங்கள் சாகாவரம் பெற்றது. சினிமா உள்ளவரை நீயும் வாழ்ந்து குடும்ப நாயகனாக வழி காட்டிக்கொண்டிருப்பாய் நண்பா என்று தெரிவித்துள்ளார் எஸ்.வி.சேகர்.

நடிகர், இயக்குநர், கதையாசிரியர், தொலைக்காட்சி தொகுதிப்பாளர், சொற்பொழிவாளர், நாடக இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் விசு. நகைச்சுவை கலந்து நடுத்த மக்களின் வாழ்க்கையை, கூட்டுக்குடும்ப வாழ்க்கையை அவர் படங்களில் சொன்ன விதமும், குடும்ப உறவுகள் பற்றிய அவரது கதைகளும், வசனங்களூம் என்றென்றும் அவர் ரசிகர்களால் நினைக்கப்படுவார்.

’’சினிமா உள்ளவரை நீயும் வாழ்ந்து குடும்ப நாயகனாக வழி காட்டிக் கொண்டிருப்பாய் நண்பா’’

சினிமாவில் இருந்து ஓய்வெடுத்த பிறகு, சன் டிவியில் அரட்டை அரங்கம் நிகழ்ச்சியின் மூலம் பரபரப்பானார். அடுத்து ஜெயா டிவியிலும் அதே பாணியினாலான நிகழ்ச்சி நடத்தி பரபரப்பை ஏற்படுத்தி வந்தவர், முதுமையின் காரணமாக 75வயதில் ஓய்வில் இருந்தார்.

சிறுநீரக பிரச்சனை காரணமாக சிச்சை பெற்று வந்த விசு, கடந்த ஆண்டு மார்ச்22ல் பலனின்றி காலமானார். சென்னை ஒக்கியம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

விசு மறைந்த ஓராண்டு ஓடிவிட்டது. இன்று அவருக்கு முதலாமாண்டு நினைவு தினம். பலரும் அவரது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். நடிகர் எஸ்.வி.சேகர் தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.