‘’எட்டாப்பு படிச்ச குஷ்பு மேடத்த கல்வி அமைச்சராக்கணும்’’

 

‘’எட்டாப்பு படிச்ச குஷ்பு மேடத்த கல்வி அமைச்சராக்கணும்’’

திமுகவிலிருந்து காங்கிரசுக்கு சென்று, அங்கிருந்து பாஜகவுக்கு சென்றிருக்கும் நடிகை குஷ்பு, அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் ஆயிரம் விளக்கும் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

‘’எட்டாப்பு படிச்ச குஷ்பு மேடத்த கல்வி அமைச்சராக்கணும்’’


அவர் தனது வேட்பு மனுவில், தனக்கு 4.01 கோடி கடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால், குஷ்புவுக்கு கடனா? என்று பலரும் அதிசயமாக கேட்டு வருகின்றனர். மேலும், வேட்புமனுவில் தான் 8ம் வகுப்பு படித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால், எட்டாப்பு படிச்சிருக்கும் குஷ்புவை நிச்சயம் கல்வி அமைச்சர் ஆக்கணும் என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

குஷ்பு அதிகம் படிக்காவிட்டால் என்ன? அவருக்கு பல மொழிகள் தெரியும் என்றும், காமராஜரும், எம்.ஜி.ஆரும் என்ன படித்தார்கள்? ஆனால், கல்வித்துறையில் அவர்களின் பங்கு முக்கியமானது என்றும் குஷ்புவுக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.