எல்.பி.ஜி பெயரில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாங்கிய பெட்ரோல் பங்க்… ஜோதிமணி வெளியிட்ட ஆதாரங்கள்

எல்.பி.ஜி பெயரில் அமைச்சர்  எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாங்கிய பெட்ரோல் பங்க்… ஜோதிமணி வெளியிட்ட ஆதாரங்கள்

கரூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போட்டியிடுக்கிறார். திமுக சார்பில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி போட்டியிடுகிறார்.

எல்.பி.ஜி பெயரில் அமைச்சர்  எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாங்கிய பெட்ரோல் பங்க்… ஜோதிமணி வெளியிட்ட ஆதாரங்கள்

செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான ஒரு வீடியோவினை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

எல்.பி.ஜி பெயரில் அமைச்சர்  எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாங்கிய பெட்ரோல் பங்க்… ஜோதிமணி வெளியிட்ட ஆதாரங்கள்

அந்த வீடியோவில், அமைச்சர் விஜயபாஸ்கர் சேர்த்த சொத்து விபரம் இருக்கிறது. ஆதாரங்களுடன் ஒரு பெண் விளக்குறார். அதில், ’’கரூர் -கோவை இருக்கிறது எல்.ஜி.பி. பெட்ரோல் பங்க். வெளிப்பார்வைக்கு எல்.ஜி.பி. என்று பெயர்ப்பலகை வைத்து ஊரை ஏமாற்றினாலும் இந்த இடத்தில் உண்மையான உரிமையாளர்கள், பாமாயில் பாஸ்கர் என்று கரூர் மக்களால் அழைக்கப்படும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும்,அவரது தம்பி சேகரும்தான்.

எல்.பி.ஜி பெயரில் அமைச்சர்  எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாங்கிய பெட்ரோல் பங்க்… ஜோதிமணி வெளியிட்ட ஆதாரங்கள்

மொத்தமாக 14 ஆயிரத்து 700 சதுரடி கொண்ட அந்த இடத்தை மூன்று பகுதிகளாக பிரித்து தங்களது நிறுவனங்களான ரெயின்போ ப்ளூ மெட்டல்ஸ் நிறுவனத்தின் பெயரில் கிரயம் செய்திருக்கிறார்கள். மாதம் 15 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஒருவர் 1800 வருடங்கள் உழைத்தால் மட்டுமே இந்த இடத்தை வாங்க முடியும். அத்தனை விலை மதிப்பு மிக்கது இந்த சொத்து.

எல்.பி.ஜி பெயரில் அமைச்சர்  எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாங்கிய பெட்ரோல் பங்க்… ஜோதிமணி வெளியிட்ட ஆதாரங்கள்

ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பாதிக்க எத்தனையோ மக்கள் எத்தனையோ விதத்தில் சம்பாதிக்கிறாங்க. ஆனால், இப்படி மக்கள் பணத்தில் வலிச்சு திங்கும் அரசியல் வாதியை கரூர் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.’’என்று சொல்கிறார்.

இந்த வீடியோவை வெளியிட்ட ஜோதிமணி, ‘’கடந்த 5 ஆண்டுகளில் நேர்மையாக உழைக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்ட நிலையில், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு இவ்வளவு சொத்து சேர்க்க எங்கிருந்து பணம் வந்தது? ஊழலில் ஊறித் திளைக்கும் அமைச்சரை, கரூர் தொகுதி மக்கள் வீட்டுக்கு அனுப்பும் நாள் வெகுதொலைவில் இல்லை’’என்றும் பதிவிட்டுள்ளார்.