ஸ்டாலின் முதலமைச்சரானால்… அந்த அதிகாரி அங்க இருக்கமாட்டான்! செந்தில்பாலாஜியின் திமிர் பேச்சு

ஸ்டாலின் முதலமைச்சரானால்… அந்த அதிகாரி அங்க இருக்கமாட்டான்! செந்தில்பாலாஜியின் திமிர் பேச்சு

திமுக ஆட்சிக்கு வந்தா வன்முறை வெடிக்கும். ரவுடியிசம் அதிகமாகும் என்று பிரதமர் மோடி சொன்னபோது ஸ்டாலின் பொங்கி எழுந்தார். அவரது கட்சியினரும் கொதித்தெழுந்தார்கள். ஆனால், கரூரில் போட்டியிடும் திமுக வேட்பாளரின் இந்த தெனாவெட்டு பேச்சுக்கு என்ன பதில்சொல்லப்போகிறது திமுக? என்று பிரச்சாரத்தில் செந்தில்பாலாஜி பேசிய வீடியோ இணையங்களில் வைரலாகிறது.

ஸ்டாலின் முதலமைச்சரானால்… அந்த அதிகாரி அங்க இருக்கமாட்டான்! செந்தில்பாலாஜியின் திமிர் பேச்சு

எதற்கெடுத்தாலும் நியாயக்குரல் கொடுக்கும் ஜோதிமணி எம்.பி., செந்தில்பாலாஜியின் இந்த பேச்சை கேட்டுக்கொண்டு எதுவும் பேசாமல் அருகிலேயே நிற்கிறார். அவர் ஏன் வாய் திறக்கவில்லை இதுபற்றி? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஸ்டாலின் முதலமைச்சரானால்… அந்த அதிகாரி அங்க இருக்கமாட்டான்! செந்தில்பாலாஜியின் திமிர் பேச்சு

ஆற்றில் மணல் அள்ளுவதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் எல்லாம் நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்களால் அதிமுக ஆட்சியில் மணல் அள்ள முடியவில்லை என்பதும், அவர்கள் மணல் அள்ள துடிக்கின்றனர் என்பதும், திமுக ஆட்சிக்கு வந்தால் மணல் அள்ளுவதற்கு எந்த தடையும் இல்லை என்று செந்தில்பாலாஜி கூறுவதை பார்த்தால் திமுக ஆட்சிக்கு வந்தால் ஆறுகளே இல்லாத நிலை ஏற்படும், ஆறுகள் எல்லாம் காணமால் போய்விடும் போலிருக்கிறது என்றும் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

ஸ்டாலின் முதலமைச்சரானால்… அந்த அதிகாரி அங்க இருக்கமாட்டான்! செந்தில்பாலாஜியின் திமிர் பேச்சு

நெட்டிசன்கள் இந்த அளவுக்கு கொதித்தெழும்படி அப்படி என்னதான் பேசினார் செந்தில்பாலாஜி?
கரூர் திமுக வேட்பாளராக களமிறங்கியிருக்கும் செந்தில்பாலாஜி பிரச்சாரத்தின்போது, ‘’திமுக எத்தனையோ வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறது. குறிப்பாக நான் ஒன்றை சொல்லிக்கொள்கின்றேன். மாட்டுவண்டியில் மணல் எடுப்பதற்கு தளபதி ஆட்சியில் தடையில்லை. தளபதி முதலமைச்சராக பதவியேற்றதும், 11மணிக்கு முதலமைச்சராக தளபதி பதவியேற்றுக்கொண்டால், 11.05க்கு மாட்டு வண்டியை நீங்களே ஆற்றுக்கு ஓட்டுங்க. எந்த அதிகாரியும் தடுக்க மாட்டான். தடுத்தா எனக்கு போன் போடுங்க. அந்த அதிகாரி அங்க இருக்க மாட்டான்’’ என்று பேச, தொண்டர்கள் கரவொலி எழுப்பி, விசில் அடித்து வரவேற்பு தெரிவிக்கின்றனர்.