அரசியலில் 2வது இன்னிங்ஸ்: நடிகை ஊர்மிளா சிவசேனாவில் இணைகிறார்

 

அரசியலில் 2வது இன்னிங்ஸ்:  நடிகை ஊர்மிளா சிவசேனாவில் இணைகிறார்

நடிகை ஊர்மிளா மடோண்ட்கர் அரசியலில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்குகிறார். காங்கிரசில் இருந்து விலகிய அவர் நாளை சிவசேனா கட்சியில் இணைகிறார். மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மகன் ஆதித்யா தாக்கரே முன்னிலையில் ஊர்மிளா(46) சிவசேனாவில் இணைகிறார் என்பதை அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

ரங்கீலா படத்தின் மூலம் இந்தியாவெங்கும் ரசிகர்களை ஈர்த்தவர் ஊர்மிளா மடோண்ட்கர். தமிழில் கமல்ஹாசனுடன் இந்தியன் படத்திலும் நடித்தார். சினிமாவில் இருந்து ஒதுங்கிய பிறகு அவர் காங்கிரஸில் இணைந்தார்.

அரசியலில் 2வது இன்னிங்ஸ்:  நடிகை ஊர்மிளா சிவசேனாவில் இணைகிறார்

கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு பாஜகவிடம் தோல்வி அடைந்தார். அதன்பின்னர் கட்சியின் செயல்பாடுகள் இருந்து ஒதுங்கி இருந்த ஊர்மிளா, உட்கட்சி பூசல் என்று கூறி காங்கிரசை விட்டே விலகினார்.

அரசியலில் 2வது இன்னிங்ஸ்:  நடிகை ஊர்மிளா சிவசேனாவில் இணைகிறார்

போதைப்பொருள் அதிகமாக நடமாடுகிறது என்றும், முப்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடனும் ஒப்பிட்டு நடிகை கங்கனா ரணாவத் சிவசேனா கட்சியை கடுமையாக விமர்சித்து வந்தபோது, அவருக்கு பதிலடி கொடுத்து சிவசேனாவுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வந்தபோது, ஊர்மிளா சிவசேனா பக்கம் சாய்ந்துவிட்டார் என்றபேச்சு எழுந்தது. அதே மாதிரி, தற்போது அவர் சிவசேனாவில் இணைகிறார்.

அரசியலில் 2வது இன்னிங்ஸ்:  நடிகை ஊர்மிளா சிவசேனாவில் இணைகிறார்

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மகன் ஆதித்யா தாக்கரே முன்னிலையில் ஊர்மிளா சிவசேனாவில் இணைகிறார் என்று அக்கட்சிய்

ஊர்மிளா சிவசேனாவில் இணைவதற்கு முன்பாகவே, மகாராஷ்டிரா சட்ட மேலவைக்கு அவரை நியமனம் செய்ய கட்சி முடிவெடுத்திருக்கிறது.