நர்சிங், லைஃப் சயின்ஸ் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம்; கொதிக்கும் கமல்

 

நர்சிங், லைஃப் சயின்ஸ் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம்; கொதிக்கும் கமல்

தேசிய தேர்வு முகமை சார்பில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நீட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே மாணவர் சேர்க்கை வழங்கப்படுகிறது. அதனால் இந்த தேர்வுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தாலும் 5 ஆண்டு காலமாக தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை வழங்கப்பட்டு வருகிறது.

நர்சிங், லைஃப் சயின்ஸ் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம்; கொதிக்கும் கமல்

சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதை தொடர்ந்து, 4 ஆண்டுகள் நர்சிங் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிஎஸ்சி நர்சிங், பிஎஸ்சி லைப் சையின்ஸ் படிப்புகளூக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் இதுகுறித்து, ‘’நர்சிங், லைஃப் சயின்ஸ் படிப்புகளுக்கும் நீட் தேர்வு என்று ஆணி அறைகிறது மத்திய அரசு. அதற்கும் தலையாட்டும் மாநில அரசு. எல்லாவற்றையும் விற்பவர்கள், தொடர்ந்து கல்வியையும் கடை விரிக்கிறீர்களே… அரசுகளே, எங்கள் மாணவர்களின் எதிர்காலம் விற்பனைக்கல்ல.’’என்று தெரிவித்துள்ளார்.