நடிகர் செந்தில் பாஜகவில் இணைந்தார்

 

நடிகர் செந்தில் பாஜகவில் இணைந்தார்

பிரபல திரைப்பட நடிகர் செந்தில் இன்று பாஜகவில் இணைந்தார். அதிமுக கட்சியில் இருந்து அவர் பல ஆண்டுகளாக தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தவர், திடீரென்று அதிமுகவில் இருந்து விலகி அதிமுகவின் கூட்டணிகட்சியான பாஜகவில் இணைந்துவிட்டார்.

நடிகர் செந்தில் பாஜகவில் இணைந்தார்

பாஜ கட்சியில் இணைந்த செந்திலை செய்தியாளர்கள் சந்தித்த போது, ‘’பாஜக நல்ல கட்சி. ஊழலற்ற ஆட்சியை செய்துகிட்டு வர்றாங்க. அது எல்லோருக்கும் தெரியும். கண்டிப்பாக இந்த ஆட்சி தமிழகத்தில் காலூன்றும். பாஜகவுக்கு ஆதரவாக நூற்றுக்கு நூறு சதவிகிதம் பிரச்சாரம் செய்வேன். அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்வது குறித்து தலைமைதான் முடிவெடுக்க வேண்டும். தலைமை பிரச்சாரம் செய்யச்சொன்னால் பிரச்சாரம் செய்வேன்’’ என்றார்.

நடிகர் செந்தில் பாஜகவில் இணைந்தார்

நடிகர் ராதாரவி, நடிகர் சிவாஜி மகன் ராம்குமார், நடிகை குஷ்பு, நடிகை கவுதமி, நடிகை காயத்ரி ரகுராம், நடிகர் அனுமோகன், நடிகர் எஸ்.வி.சேகர், இசையமைப்பாளர்கள் பரத்வாஜ், தினா என்று பாஜகவில் ஒரு நட்சத்திர பட்டாளமே இருக்கின்றன. இந்நிலையில், அந்த பட்டாளத்துடன் செந்திலும் இணைந்திருக்கிறார். அடுத்து ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் பாஜகவில் இணையவிருப்பதாக தகவல்.