கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஸ்டாலின்

 

கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கொரோனா வைரஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டார். சென்னை காவேரி மருத்துவமனையில் அவர் இந்த ஊசியை போட்டுக்கொண்டார்.

கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஸ்டாலின்

இதுகுறித்து ஸ்டாலின், ‘’கொரோனா வைரஸ் முதல் தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டேன். குறுகிய காலத்தில் சளைக்கா முயற்சிகளால் நமக்கு வெற்றிகரமாகத் தடுப்பூசியைக் கொடுத்த அறிவியல் சமுதாயத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. தொடர்ந்து நலத்தோடும் பாதுகாப்போடும் இருப்பதற்கான நடவடிக்கைகளை நாம் அனைவரும் மேற்கொள்வோம்’’ என்று தெரிவித்திருக்கிறார்.

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் இந்தியா முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை மொத்தம் 2 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஸ்டாலின்

கடந்த 1ம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இதில் 60 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

பிரதமர், முதல்வர் என்று அனைவரும் தடுப்பூசி போட்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கிறார்.