ஓபிஎஸ் – ஈபிஎஸ் மோதல்; அதிமுக பரபரப்பு

 

ஓபிஎஸ் – ஈபிஎஸ் மோதல்; அதிமுக பரபரப்பு

அதிமுகவில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் தங்களது ஆதரவாளர்களுக்கு தொகுதிகளை ஒதுக்குவதிலும் வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும் மோதல் ஏற்பட்டுள்ளது என்று தகவல்.

ஓபிஎஸ் – ஈபிஎஸ் மோதல்; அதிமுக பரபரப்பு

இதனால்தான் நேற்றைக்கு வெளிவரவேண்டிய அதிமுக இரண்டாவது வேட்பாளர்கள் பட்டியல் வெளிவராமல் இருக்கிறது.

இன்றைக்கு மகளிர் தின கொண்டாட்டத்தில் ஈபிஎஸ் -ஓபிஎஸ் இருவரும் பங்கேற்பதாக இருந்தது. மோதலினால் அதை தவிர்த்துள்ளார் ஈபிஎஸ் என்று தகவல்.

ஓபிஎஸ் – ஈபிஎஸ் மோதல்; அதிமுக பரபரப்பு

ஓபிஎஸ் தொடர்ந்து ஓரங்கட்டுப்படுவதாக பேச்சு வந்த நிலையில், வேட்பாளர்களை தேர்வு செய்யும் போது என்னை கேட்டுத்தான் அம்மாவே முடிவு எடுப்பார். வேட்பாளர் தேர்வின்போது என்னையும் அருகில் வைத்துக்கொள்வார் அம்மா என்று ஓபிஎஸ் சொன்னது கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வேட்பாளர் தேர்வில் தான் ஒதுக்கப்படுவதாகவும், தன்னையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று எடப்பாடிக்கு சொல்வதாக இப்படி சொல்லி இருக்கிறார் என்ற பேச்சு எழுந்தது. சசிகலா பிரச்சனையினலா ஓபிஎஸ்க்கும் உரிய அங்கீகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஆதரவாளர்களுக்கு சீட்டு ஒதுக்குவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது.

இந்த கருத்து வேறுபாட்டினால்தான், முதல் வேட்பாளர் பட்டியலில் அமைச்சர்கள் பெயரை காணவில்லை என்று தெரிகிறது. இத்தனை அமைச்சர்கள் இருந்தும் அவர்களில் ஜெயக்குமார் மட்டுமே முதல் வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்ததும் இந்த கருத்து வேறுபாடு காரணம்தான் என்று தெரிகிறது.