ஸ்டாலின் அளித்த 7 வாக்குறுதிகளும் கமல் வாக்குறுதிகளா? அதில் ஒன்று பாஜக திட்டமா?

 

ஸ்டாலின் அளித்த 7 வாக்குறுதிகளும் கமல் வாக்குறுதிகளா? அதில் ஒன்று பாஜக திட்டமா?

திருச்சியில் நேற்று நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால்.. என்று 7 வாக்குறுதிகளை அளித்தார்.

ஸ்டாலின் அளித்த 7 வாக்குறுதிகளும் கமல் வாக்குறுதிகளா? அதில் ஒன்று பாஜக திட்டமா?

திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து கிராமங்களுக்கும் பிராட்பேண்ட் உடன் கூடிய இணைய வசதி ஏற்படுத்தி தரப்படும், தமிழகத்தின் ஊரக பகுதிகளில் அடுத்த 10 ஆண்டுகளில் 20 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும், வேளாண் உற்பத்தி சாகுபடி பரப்பு 20 லட்சம் ஹெக்டேராக மாற்றப்படும், தனிநபர் வருமானம் 4 லட்சமாக மாறும் என்று சொல்லிக்கொண்டே சென்ற ஸ்டாலின், குடும்ப தலைவலிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

குடும்ப தலைவலிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் என்பது கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யத்தின் திட்டம் என்ற விமர்சனம் எழுந்தது. தன் திட்டத்தை காப்பி அடித்துவிட்டதாக கமல்ஹாசனே தெரிவித்திருந்தார்.

ஸ்டாலின் அளித்த 7 வாக்குறுதிகளும் கமல் வாக்குறுதிகளா? அதில் ஒன்று பாஜக திட்டமா?

முன்கூட்டியே சொன்னால் காப்பியடித்துவிடுவார்கள் என்றுதான் தனது கட்சி கொள்கைளை பற்றி வாய்திறக்காமல் இருக்கிறார் கமல். இந்நிலையில் பிரச்சாரத்தில் கமல் பேசியதை காப்பியடித்துவிட்டதாக பேச்சு எழுந்தது.

இதற்கிடையில் இது ஸ்டாலின் திட்டமும் இல்லை. கமல் திட்டமும் இல்லை. இது பாஜக திட்டம் என்று ஒரு பேச்சு எழுந்திருக்கிறது.

’’அசாமில் வறுமை கோட்டிற்கு கீழே வாழும் மக்களுக்கு ஒரு ரேசன் அட்டைக்கு மாதம் ரூ830/- வழங்கும் பாஜக திட்டத்தை காப்பியடித்து தமிழ் நாட்டில் மாதம் ரூ. 1000/-வழங்குவதாக தேர்தலுக்காக சொல்லும் ஸ்டாலினே !இது தான் உங்கள் தொலை நோக்கு திட்டமா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம்.

ஸ்டாலின் அளித்த 7 வாக்குறுதிகளும் கமல் வாக்குறுதிகளா? அதில் ஒன்று பாஜக திட்டமா?

’இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000’ என்பது கமல் திட்டமா? பாஜக திட்டமா? என்று பேச்சு இருக்கையில், தங்கச்சாலை பிரச்சாரத்தில் பேசிய கமல், ‘’என்னிடம் இருந்து மு.க.ஸ்டாலின் காப்பி அடிக்கிறார். ’நாமே தீர்வு’ என்று நாங்கள் சொன்னால், ’ஒன்றிணைவோம் வா’ என்று சத்தம் மாறாமல் சொல்கிறார். இல்லதரசிகளுக்கு ஊதியம் என்ற கருத்து கோட்பாடை நாங்கள் தான் முதல் கட்சியாக அறிவித்தோம். ஆனால், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தருவேன் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்’’ என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், ‘’எங்கள் ஆட்சியில் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்போம் என்றோம். அதை அப்படியே, ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என்று அறிவிக்கிறார் ஸ்டாலின். 7 உறுதி மொழிகள் உள்பட அத்தனையும் காப்பி அடிக்கிறார் என்று சொல்லி இருக்கும் கமல், ‘டிஜிட்டல் தற்சார்பு திட்டம்’ என்று நாங்கள் சொல்லியதை ‘பிராட்பேண்ட்’ என்று காப்பியடிக்கிறார் என்று தொடர்ந்து குற்றம்சாட்டியுள்ளார்.