கமலுக்கு வைத்திருந்ததை எடுத்து வைகோ, திருமாவுக்கு கொடுத்த ஸ்டாலின்!

 

கமலுக்கு வைத்திருந்ததை எடுத்து வைகோ, திருமாவுக்கு கொடுத்த ஸ்டாலின்!

மக்கள் நீதி மையத்தை திமுக கூட்டணிக்கு கொண்டுவர உதயநிதி ஸ்டாலினும், ஸ்டாலின் மருமகன் சபரீசனும் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக தகவல்கள் வெளியானதை கமல்ஹாசனும் உறுதிப்படுத்தினார். ஆனால் தூது அனுப்புவது எல்லாம் சரிப்பட்டு வராது தலைமை நேரடியாக பேச வேண்டும் என்று கூறினார். அதாவது ஸ்டாலின் தன்னிடம் நேரடியாக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்பதை அப்படி கூறினார்.

கமலுக்கு வைத்திருந்ததை எடுத்து வைகோ, திருமாவுக்கு கொடுத்த ஸ்டாலின்!


ஸ்டாலின் பிறந்தநாள் அன்று அவரை ரொம்பவே அதிகமாக புகழ்ந்து வாழ்த்து தெரிவித்திருந்தார் கமல்ஹாசன். காங்கிரஸ் கட்சியினர் வேறு கமல்ஹாசன் தங்கள் கூட்டணி வரவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். கமல்ஹாசனும் திமுக கூட்டணியில் இணைவது போலத்தான் ஒரு பிம்பம் இருந்தது. அதனால் திமுகவும் மக்கள் நீதி மையத்திற்கு 18 இடங்களை ஒதுக்கீடு செய்துவிட்டு மற்ற கட்சிகளுக்கு சொற்ப இடங்களை ஒதுக்கீடு செய்து வைத்திருந்தது.

கமலுக்கு வைத்திருந்ததை எடுத்து வைகோ, திருமாவுக்கு கொடுத்த ஸ்டாலின்!


சொற்ப இடங்கள் தருவதால் வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்டுகள் மற்றும் காங்கிரஸ் ஆதிருப்தியில் இருந்ததால், இவர்கள் அனைவரும் கமல்ஹாசன் பக்கம் போவார்கள் என்ற பேச்சு எழுந்தது. நல்லவர்கள் எல்லாம் வரவேண்டும் என்று கமல்ஹாசனும் தொடர்ந்து அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத திமுக அதிர்ந்து போனது. உடனே சுதாரித்துக் கொண்டு, இரண்டு இடங்கள் தான் தரமுடியும் என்று சொன்ன திமுக திடீரென 6 இடங்களை தருவதாகச் சொல்லி திருமாவளவனை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்தது.

கமலுக்கு வைத்திருந்ததை எடுத்து வைகோ, திருமாவுக்கு கொடுத்த ஸ்டாலின்!

அடுத்து, இரண்டு இடங்களில்தான் தரமுடியும் என்று சொன்னதால் கடும் அதிருப்தியில் இருந்த வைகோவை நாலு தருவதாக சொல்லி சமாதானப் படுத்த முடியவில்லை. பின்னர் வேறு வழியின்றி ஆறு தருவதாகச் சொல்லி அவரையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்தார் ஸ்டாலின். ஆனாலும் சிபிஎம் காங்கிரஸ் மட்டும் கடைசி வரைக்கும் இழுத்து இழுத்து அடித்துக்கொண்டே இருந்தன.

கமலுக்கு வைத்திருந்ததை எடுத்து வைகோ, திருமாவுக்கு கொடுத்த ஸ்டாலின்!

அதனால் காங்கிரஸ் தங்கள் பக்கம் வர கமல்ஹாசன் அழைப்பு விடுத்தார்
முன்னதாக திருமாவளவனுக்கு ஆறு சீட்டுகள் தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. என் தம்பிக்கு ஆறு சீட்டு தானா என்று பேசி திமுகவை அதிர வைத்தார் கமல்ஹாசன். ஆனாலும் கமல்ஹாசனின் உள் நோக்கத்தை புரிந்து கொண்ட திருமாவளவன், புதிய கட்சியில் 20 இடங்களில் போட்டியிடுவதை விட பிரபல கட்சியில் 6 இடங்களில் வெற்றி பெறூவதே முக்கியம் என்று, திமுகவில் கொடுத்ததை வாங்கிக் கொண்டு, பின்னால் பொறுமிக் கொண்டிருக்கிறார்.

கமலுக்கு வைத்திருந்ததை எடுத்து வைகோ, திருமாவுக்கு கொடுத்த ஸ்டாலின்!

அதேபோல் காங்கிரசுக்கும் வலைவிரித்தார் கமல். கமல்ஹாசன் என்னத்தை புரிந்துகொண்ட திமுக 16 தொகுதிகள் தான் தருவேன் என்று சொன்ன நிலையிலிருந்து மாறி, 25 தொகுதிகள் தருவதாகச் சொல்லி காங்கிரசையும் கையெழுத்திட வைத்து விட்டது. இன்னும் மிச்சம் இருப்பது சிபிஎம் மட்டும்தான். அதையும் ஒரு வழிக்கு கொண்டு வந்து விடும் திமுக.

கமல்ஹாசனுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 18 இடங்கள் தான் வைகோ , திருமாவளவன் , சிபிஎம் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது என்ற விவரம் விபரமும் தற்போது தெரிய வருகிறது.

கமலுக்கு வைத்திருந்ததை எடுத்து வைகோ, திருமாவுக்கு கொடுத்த ஸ்டாலின்!

கமல் மட்டும் திமுக கூட்டணிக்கு வந்திருந்தால் மதிமுக விசிகவுக்கு தலா 2தான். கம்யூனிஸ்டுகளுக்கு தலா 4தான். காங்கிரசுக்கு 16 அல்லது 18தான். மற்ற கட்சிகளுக்கு தலா 1தான். இதை புரிந்துகொண்ட திமுக கூட்டணி கட்சியினர், கூட்டணிக்கு வராததால் கமலுக்கு கோடி கும்பிடு போடுகின்றனர்.