முதல்வருக்கு நேரடித்தொடர்பு: தங்க கடத்தல் வழக்கில் பரபரப்பு

 

முதல்வருக்கு நேரடித்தொடர்பு: தங்க கடத்தல் வழக்கில் பரபரப்பு

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மத்திய பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கும் ஏப்ரலில் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் என்பதால் ஐந்து மாநிலங்களும் கூட்டணி, தொகுதி பங்கீடு என்று பரபரப்பாக இருக்கிறது. இந்நிலையில், கேரள தங்க கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயனுக்கு நேரடி தொடர்பு இருக்கிறது சுங்கத்துறை, கேரள உயர்நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்திருக்கிறது.

தேர்தல் நேரத்தில் இந்த அறிக்கை கேரளாவில் பெரும் புயலைக்கிளப்பி இருக்கிறது.

முதல்வருக்கு நேரடித்தொடர்பு: தங்க கடத்தல் வழக்கில் பரபரப்பு

கொச்சி சுங்க ஆணையர் சுமித்குமார் தாக்கல் செய்துள்ள அந்த பிரமாணப்பத்திரத்தில், தங்க கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயன், சபாநாயகர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் உள்ளிட்டோரின் முறையற்ற, சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றி ஸ்வப்னா சுரேஷ் தெளிவாக கூறியுள்ளதாக பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னாள் தூதருடன் முதலமைச்சருக்கு இருந்த நெருங்கிய தொடர்புகள் , சட்டவிரோத பண பரிவர்த்தனைகள் பற்றி ஸ்வப்னாவின் அறிக்கைகளை மேற்கோள் காட்டி குறிப்பிட்டுள்ளார்.

முதல்வருக்கு நேரடித்தொடர்பு: தங்க கடத்தல் வழக்கில் பரபரப்பு

முதல்வருக்கு எதிராக சுங்கத்துறை நேரடியாக குற்றச்சாட்டினை முன்வைப்பது இதுதான் முதல் முறையாகும்.

தங்க கடத்தல் வழக்கில் முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளர் எம்.சிவசங்கரின் பங்கு மற்றும் கடத்தல் தொடர்புடைய வழக்குகளை விசாரித்தபோது, முதல்வரின் நேரடி தொடர்பும் தெரியவந்துள்ளது.

எதிர்க்கட்சிகள் விரைவில் முதல்வரும் சிக்குவார் என்று கூறிவந்தது உண்மையாகிறது.

தங்க கடத்தல் வழக்கில் கேரள முதல்வருக்கே நேரடி தொடர்பு இருப்பதாக வெளிவந்த தகவலினால் கேரள அரசியலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து விஸ்வரூபமாக்கும் என்று தெரிகிறது.