உதவிய அதிமுக; துணைநின்ற பாமகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்: மமகவினருக்கு ஜவாஹிருல்லா உருக்கமான கடிதம்

உதவிய அதிமுக; துணைநின்ற பாமகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்: மமகவினருக்கு ஜவாஹிருல்லா உருக்கமான கடிதம்

திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் மமகவில் சலசலப்பு எழுந்தது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டியிட்டு விட்டு இந்த தேர்தலில் அதைவிட கூடுதல் தொகுதிகளில் நிற்காவிட்டாலும் பரவாயில்லை. குறைவான தொகுதிகளில் எப்படி நிற்க முடியும் என்று மமகவுக்கு 2 சீட்டுதான் என்பதால் அக்கட்சியினர் ரொம்பவே அப்செட்டில் இருக்கின்றனர்.

உதவிய அதிமுக; துணைநின்ற பாமகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்: மமகவினருக்கு ஜவாஹிருல்லா உருக்கமான கடிதம்

தொண்டர்களோ, ’’ஒப்பந்தத்தை கிழித்து முகத்தில் வீசிவிட்டு வாருங்கள்’’ என்று தங்கள் ஆவேசத்தை நிர்வாகிகள் இடத்தில் தெரிவித்து வருகின்றனர். அடுத்த முதல்வர் ஸ்டாலின் என்று கூவி கூவி, கூட்டணியில் இல்லாத கட்சியினரை ஏகத்துக்கும் ஏசினோம். அதுக்கு கிடைத்த பலன் என்ன? இந்த சீட்டுக்காகவா இத்தனை ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினோம் என்றும், எத்தனை சீட்டுகொடுத்தாலும் தலைவர்கள் தலையாட்டிக்கொண்டு வந்தால் மட்டும் போதுமா? தொண்டர்கள் நாங்கள் ஓட்டு போட வேண்டாமா? நாங்கள் கொதித்து கிடக்கிறோம் என்றும் தங்களது ஆவேசத்தை தலைமைக்கு தெரிவித்து வருகின்றனர். இதனால் மமக நிர்வாகிகள் மத்தியிலும் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

உதவிய அதிமுக; துணைநின்ற பாமகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்: மமகவினருக்கு ஜவாஹிருல்லா உருக்கமான கடிதம்

இந்நிலையில் கட்சினருக்கு ஹவாஹிருல்லா ஒரு உருக்கமான கடிதத்தினை எழுதி இருக்கிறார். அதில், ‘’தமிழகத்தில் சங்கிகளின் ஆதிக்கம் வளர்ந்துவிட்டது. எப்படியாவது ஆட்சிக்கட்டிலை பிடிக்க வேண்டும் என்கிற முனைப்புடன் அவர்கள் சந்திக்கும் தேர்தல் இது. நாம் வளந்துவிடக்கூடாது என்று நினைக்கிறார்கள். அ தற்கு நாம் இடம் தந்துவிடக்கூடாது.

உதவிய அதிமுக; துணைநின்ற பாமகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்: மமகவினருக்கு ஜவாஹிருல்லா உருக்கமான கடிதம்

2009 நாடாளுமன்ற தேர்தலில் நாம் உணர்ச்சிவசப்பட்டது மாதிரி நாம் உணர்ச்சிவசப்பட்டால் என்னவாகும் என்பதை சுயபரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். 2 சீட்டை வேண்டாம் என்றுசொல்லிவிட்டு ஆதரவு மட்டும் கொடுத்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதிகாரமற்ற நிலையில் பலவீனமாகிவிடுவோம்’’ என்று தெரிவித்துள்ள அவர்,

’’சிஏஏ சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய பாஜக, உதவிய அதிமுக, துணைநின்ற பாமக கட்சிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். தமிழகத்தை கலவரக்காடாக மாற்ற நினைக்கும் சங்பரிவார வெறுப்பு அரசியலை எதிர்க்க வாருங்கள்’’ என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.

மேலும், இரண்டு தொகுதிகளில் ஒன்றில் நமது சின்னத்திலும் மற்றொன்றில் சூரியன் சின்னத்திலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்திருக்கிறார்.