மாலையில் அனிதா-ஸ்னோலின் மாநாட்டு அரங்கில் சந்திப்போம்..திருமுருகன் காந்தி

 

மாலையில் அனிதா-ஸ்னோலின் மாநாட்டு அரங்கில் சந்திப்போம்..திருமுருகன் காந்தி

அறவழிப் போரட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் வாங்கக்கோரி திருச்சியில் மக்கள் இயக்கங்களின் உரிமை முழக்க பேரணி மாநாடு இன்று மாலையில் நடைபெற இருக்கிறது. திருச்சியில் உழவர் திடலில் இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது.

மாலையில் அனிதா-ஸ்னோலின் மாநாட்டு அரங்கில் சந்திப்போம்..திருமுருகன் காந்தி

எட்டுவழிச்சாலை, மீத்தேன், ஸ்டெர்லைட், கூடன்குளம், நீட், CAA, ஈழம், தாதுமணல், ஜல்லிக்கட்டு, டாஸ்மாக், கெயில், உழவர், ஒக்கி, ஜாதியம்.. என
‘போராடும் மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை இரத்து செய்யக்கோரி’ அனைத்து மக்கள் இயக்கங்களும் ஒன்றுகூடும் மாநாடு இன்று 6ம் தேதி அன்று மாலை 3 மணிக்கு திருச்சியில் நடைபெறுகிறது.
இதற்காக ’திரள்வோம் திருச்சியில்’ என்றும் அறிவித்திருக்கிறார் மே-17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி.

மாலையில் அனிதா-ஸ்னோலின் மாநாட்டு அரங்கில் சந்திப்போம்..திருமுருகன் காந்தி

வெகுமக்களாய் திரண்டு நடத்தும் எளிய மக்களுக்கான மாநாடு. கட்சி, சாதி, மதம் கடந்து ஒன்றுதிரளும் மாநாடு. மண் காக்க, மக்களை காக்க, தமிழினம் காக்க நடக்கும் மாநாடு என்று தெரிவித்துள்ள திருமுருகன் காந்தி, போராடும் மக்களை ஆதரிக்க அணி திரள்வீர். அனைத்து இயக்கம் சார்பாக அழைக்கிறோம் என்றும் அழைப்பு விடுத்திருக்கிறார்.

நீட் அரக்கனால் நெறிக்கப்பட்ட எம் தங்கையின் குரலை எப்படி மறக்கமுடியும். நீட் கொடுமையை எதிர்த்து போராடிய தோழர்கள் ஒன்றுகூடுகிறோம் திருச்சியில். மாலை உழவர் திடல் அனிதா-ஸ்னோலின் மாநாட்டு அரங்கில் சந்திப்போம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.