பொன்னாரை எதிர்த்து களமிறங்கும் பிரியங்கா காந்தி

 

பொன்னாரை எதிர்த்து களமிறங்கும்  பிரியங்கா காந்தி

கன்னியாகுமரி தொகுதிக்கு கடந்த 2014ம் ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வசந்தகுமாரை தோற்கடித்து வெற்றி பெற்றார் பொன்.ராதாகிருஷ்ணன். ஆனால், 2019ல் நடந்த நடாளுமன்ற தேர்தலில் 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பொன்.ராதாகிருஷ்ணனை தோற்கடித்து வெற்றி பெற்றார் வசந்தகுமார்.

பொன்னாரை எதிர்த்து களமிறங்கும்  பிரியங்கா காந்தி

வசந்தகுமாரின் மரணத்திற்கு பிறகு கன்னியாகுமரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் வந்திருக்கிறது. தேர்தல் விதிகளின்படி கடந்த பிப்ரவரி 28ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடித்திருக்க வேண்டும். ஆனால், சட்டமன்ற தேர்தலும் கன்னியாகுமரி நாடளுமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொன்னாரை எதிர்த்து களமிறங்கும்  பிரியங்கா காந்தி

அதிமுக கூட்டணியில் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று உடன்படிக்கை செய்யப் பட்டிருக்கிறது. அதனால், பாஜக சார்பில் மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணனே களமிறங்குவார் என்று தெரிகிறது. அதே போல், திமுக கூட்டணியிலும் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலை காங்கிரசுக்கு விட்டுக்கொடுக்கும் என்றே தெரிகிறது.

காங்கிரஸ் சார்பில், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த், சென்னை சத்யமூர்த்தி பவனில் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்.

பொன்னாரை எதிர்த்து களமிறங்கும்  பிரியங்கா காந்தி

கன்னியாகுமரி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறார்.

ராகுல்காந்தி வயநாடு தொகுதி எம்.பியாக இருப்பது போல், பிரியங்கா காந்தி கன்னியாகுமரி தொகுதி எம்.பியாக வரவேண்டும் என்றும் காங்கிரஸ் விரும்புவதாகவே தகவல். அதுமட்டுமல்லாமல் பிரியங்கா போட்டியிட்டால் வெற்றி உறுதி என்றும் காங்கிரசார் நம்புவதாக தகவல்.

பொன்னாரை எதிர்த்து களமிறங்கும்  பிரியங்கா காந்தி

வசந்தகுமார் தரப்பு செல்வாக்கும் அதிகம் இருப்பதால் அதையும் கவனத்தில் கொண்டிருக்கிறது காங்கிரஸ்.

கன்னியாகுமரி தொகுதிக்கு வரும் மார்ச் 12ம் தேதி தொடங்கி மார்ச் 19ம் தேதி வேட்புமனு தாக்கல் முடிகிறது. அதனால், காங்கிரசும், பாஜகவும் தீவிரம் காட்டிவருகின்றன.