மாணவ, மாணவியருக்கு இலவச பெட்ரோல் கார்டு:நெரிசல் மிகு பயணம் இனி இல்லை

 

மாணவ, மாணவியருக்கு இலவச பெட்ரோல் கார்டு:நெரிசல் மிகு பயணம் இனி இல்லை

இதுவரை பார்க்காத முன்னேற்றம் தமிழக அரசியலில் வரப்போகுது என்று சொல்லும் அர்ஜூனமூர்த்தி, மாணவர் பயணத்தை இனிதாக்கிடுவோம். கற்கும் சூழலை மகிழ்வாக்கிடுவோம் என்று இலவச பெட்ரோல் கார்டை கொண்டு வருவேன் என்கிறார்.

மாணவ, மாணவியருக்கு இலவச பெட்ரோல் கார்டு:நெரிசல் மிகு பயணம் இனி இல்லை

இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியை தொடங்கி இருக்கும் தொழிலதிபர் அர்ஜூனமூர்த்திக்கு எந்திரன் சின்னம் ஒதுக்கப்பட்டிருக்குது. ’நம்ம சின்னம் எந்திரன்’ என்று அசத்தி வருகிறார் அவர். தான் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்களை கொண்டு வருவேன் என்று அடுக்கிகொண்டே போகிறார் அர்ஜூனமூர்த்தி.

சட்டமன்ற தேர்தல் பிரச்சார வாக்குறுதிகளாக, நாட்டின் வளர்ச்சியுடன் கிராமங்களை இணைத்திடுவோம் என்று கூறியிருக்கும் அவர், தான் ஆட்சிக்கு வந்தால் விஏஓ அதாவது கிராம நிர்வாக அதிகாரி மாதிரி கிராம வளர்ச்சி அதிகாரி என்று விடிஓ என்கிற ஒரு பதவியை கொண்டு வருவேன் என்று சொல்லி, 1. கிராம தன்னிறைவுக்கு “கிராம வளர்ச்சி அதிகாரி” நியமனம். 2. அரசு திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பார். 3. திட்டங்களின் பயன்பாட்டினை கண்காணித்திடுவார். 4. ஆயிரக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

மாணவ, மாணவியருக்கு இலவச பெட்ரோல் கார்டு:நெரிசல் மிகு பயணம் இனி இல்லை

அதே போல், அதிகாரத்தை பரவலாக்க ஆட்சியை எளிமையாக்க தமிழகத்திற்கு 4 துணை முதலமைச்சர்கள் என்றும், விஏஓ எனும் கிராம நிர்வாக அதிகாரி மாதிரி கிராம வளர்ச்சி அதிகாரி என்று விடிஓ என்கிற ஒரு பதவியை கொண்டு வருவேன் என்றும் சொல்கிறார்.

தமிழகத்திற்கு 4 துணை முதலமைச்சர்கள் கொண்டு வருவேன் என்று சொல்லி இருக்கும் அவர், 1. மகளிரை அதிகாரப்படுத்த ஒரு பெண் துணை முதல்வர், 2. அறிவுசார் யுகத்தை எதிர்கொள்ள ஒரு துணை முதல்வர், 3. அம்பேத்கர் கனவு மெய்ப்பட ஒரு பட்டியலின துணை முதல்வர், 4. அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாத சமூகத்திற்கு ஒரு துணை முதல்வர் என்றும் தெரிவித்திருக்கிறார்.

தனது கட்சி சின்னம் எந்திரன் என்பதால், அந்த ரோபோ சொல்லுவது ஒரு பிரச்சாரம் செய்து வருகிறார். அதாவது, நான் ராணுவத்துக்கு போனேன், அது ராக்கெட் யுகமா மாறிடுச்சு. நான் விவசாயத்துக்கு போனேன் விளைச்சலில் புரட்சி ஏற்பட்டது. அடுத்த தலைமுறைக்காக ஐடி துறைக்கு போனேன். அங்க artificial intelligence வந்து கலக்குது. இப்போ இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சிக்காக வந்திருக்கேன். இதுவரை பார்க்காத முன்னேற்றம் தமிழக அரசியலில் வரப்போகுது என்று ரோபோ சொல்வது போல் அந்த பிரச்சாரத்தை அமைத்திருக்கிறார்.

மேலும், மாணவர் பயணத்தை இனிதாக்கிடுவோம். கற்கும் சூழலை மகிழ்வாக்கிடுவோம் என்று, மாணவ, மாணவியருக்கு இலவச பெட்ரோல் கார்டு தருவேன் என்றும், மாநில விற்பனை வரி விலக்கு , விலக்களிக்கப்படும் தொகை மாணவர்களுக்கே என்றும், மாத இறுதியில் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும், நெரிசல் மிகு பயணம் இனி இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.