தூது அனுப்பி சசிகலாவுக்கு ஈபிஎஸ் கொடுத்த வாக்குறுதி!

 

தூது அனுப்பி சசிகலாவுக்கு ஈபிஎஸ் கொடுத்த வாக்குறுதி!

தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று கர்நாடகத்தில் இருந்து தமிழகம் வரும் வழியில் ஆதரவாளர்களிடம் பேசிய சசிகலா, அந்தர் பல்டி அடித்து அரசியலை விட்டே ஒதுங்க நினைத்தது ஏன் என்பதற்கு தினம் ஒரு தகவல் பரவி வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனுப்பிய தூது காரணமாகத்தான் அந்த முடிவை அவர் எடுத்ததாக ஒரு தகவல் பரவுகிறது.

தூது அனுப்பி சசிகலாவுக்கு ஈபிஎஸ் கொடுத்த வாக்குறுதி!

தூது சென்றவர் சசிகலாவிடத்தில், ‘’நீங்க சொன்னபடிதான் முதல்வரும் ஆட்சியை நடத்திட்டு வர்றாரு. இடையில சில தினகரனால் சில குழப்பங்கள் ஏற்பட்டுவிட்டது. அதனால்தான் அவரை வெளியேற்ற வேண்டியதாகிவிட்டது. பாஜக தரப்பில் சில அழுத்தங்களையும் சமாளித்துக்கொண்டு வருகிறோம். இதை புரிந்துகொள்ளாமல் ஆடிக்கொண்டிருக்கிறார் தினகரன். இதை சிறையில் இருக்கும் தங்களிடத்தில் தெரியப்படுத்த பலமுறை முயன்றும் தினகரன் அதற்கெல்லாம் முட்டுக்கட்டை போட்டுவிட்டார். வெளியே வந்த பிறகும் கூட உங்களை சந்திக்க பெரும்பாடு படவேண்டியதாகிவிட்டது. இப்போதும் கூட திமுகவுடன் சேர்ந்துகொண்டு அதிமுகவுக்கு எதிரான வேலைகளை பார்க்கிறார் தினகரன். ஆனால், திமுக அளிக்க அதிமுகவோடு இணைய தயார் என்று வெளியே ஒப்புக்காக பேசிக்கொண்டிருக்கிறார்.

தூது அனுப்பி சசிகலாவுக்கு ஈபிஎஸ் கொடுத்த வாக்குறுதி!

சிறையில் இருந்து வந்ததும், கோயில் கோயிலாக சென்று மனமுருக வேண்டும் என்றுதான் நீங்கள் நினைத்ததாக கேள்விப்பட்டார் முதல்வர். இப்போதைக்கு எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் அதையே செய்யச்சொல்லி இருக்கிறார் முதல்வர்.

இந்த தேர்தலில் எப்படியாவது ஜெயிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஜெயித்ததும், உங்களுக்கு உரிய மரியாதையை கொடுக்க இருப்பதாக முதல்வர் சொல்கிறார். இது சத்தியம்.’’ என்று சொல்ல,

‘’நானும் தினகரனை நம்பி நிறைய பணத்தை கொடுத்திட்டேன். அதுக்கெல்லாம் கணக்கே இல்ல. இதுல, இன்னும் தேவை இருக்குதுன்னு சொல்லுறாரு. அவரை நம்பி கொடுக்குறதா வேண்டமான்னுதான் யோசனையா இருக்குது’’’ன்னு தூதுவரிடம் வேதனையில் புலம்ப,

‘’அலட்டிக்காம இருங்க. அமைதியா இருங்க. உங்களுக்கு உரிய கவுரவம் உங்களை தேடிவரும்’’ என்று மீண்டும் நம்பிக்கை சொல்லிவிட்டு போயிருக்கிறார் தூதுவர்.

தூது அனுப்பி சசிகலாவுக்கு ஈபிஎஸ் கொடுத்த வாக்குறுதி!

இந்த சந்திப்புக்கு பிறகுதான், அரசியலை விட்டே விலகுவதாக சசிகலா அறிவித்துள்ளார். கொரோனாவில் இருந்து மீண்டு விடுதியில் தங்கி இருந்தபோது, ஒரு மேசேஜ்க்காக காத்திருக்கிறேன். அது வந்ததும் புறப்படலாம் என்றிருக்கிறேன் என சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார் சசிகலா. அந்த மெசேஜ் வராததால்தான் அவர் கடுப்பில் புறப்பட்டு வரும் வழியில், ஆதரவாளர்களிடம் வெடித்திருக்கிறார்.

அந்த மெசேஜ் செல்ல வாய்ப்பில்லாமல் இருந்ததால், தற்போது கிடைத்த கேப்பில் தூதுவர் மூலமாக சென்றிருக்கிறது.