இனிகோ இருதயராஜை திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வைக்க திட்டம்

 

இனிகோ இருதயராஜை திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட  வைக்க திட்டம்

திமுக கூட்டணியில் கடந்த 2ம் தேதி நடைபெற்ற தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 இடங்களும், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டன. நேற்று நடைபெற்ற இறுதி பேச்சுவார்த்தையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்றைக்கு சிபிஐயுடன் தொகுதிப்பங்கீடு நிறைவு பெற இருக்கிறது. மதிமுக, சிபிஎம், காங்கிரஸ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை இழுபறியில் இருக்கிறது.

இனிகோ இருதயராஜை திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட  வைக்க திட்டம்

இதுஒரு புறமிருக்க, திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடையே தொடர்ந்து ஐந்தாவாது நாளாக இன்றைக்கும் நேர்காணல் நடைபெற இருக்கிறது. நாளையுடன் நேர்காணல் முடிகிறது.

நேர்காணல் நடைபெற்றாலும் கே.என்.நேருவின் மகன் லால்குடி தொகுதியில் போட்டியிடப்போவதாக சொல்லப்படுகிறது. அதே போல் இனிகோ இருதயராஜையும் திருச்சியில் நிறுத்த திமுக முடிவு செய்திருப்பதாக தகவல்.

அன்பில் மகேஷ், திருச்சி சிவாவின் மகன் சூர்யாசிவா, மலைக்கோட்டை மதிவாணன் ஆகியோர் திருச்சி கிழக்கு தொகுதிக்காக முட்டி மோதிக்கொண்டிருக்கையில், கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவரான இனிகோ இருதயராஜ், திருச்சி கிழக்கு தொகுதியில் தான் போட்டியிடப்போவதாக சொல்லிக்கொண்டு தொகுதியில் தீவிர வேலை பார்த்து வருகிறார்.

இனிகோ இருதயராஜை திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட  வைக்க திட்டம்

இந்நிலையில், ‘’திருச்சி ஸ்ரீ ரங்கம் கோவில் வாசலில் பெரியார் சிலையை வைத்து இந்துக்களையும் இந்து கடவுளையும் அவமதித்த கும்பல், மதச்சார்பின்மை என்ற போர்வையில் மதமாற்றத்தையே தொழிலாக கொண்ட இனிகோ இருதயராஜை திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வைக்க திட்டமிடுகிறது. இனிகோ இருதயராஜ் போன்ற இந்த இந்துவிரோத சக்திகளை தோற்கடித்து இந்துக்களுக்கு எதிராக செயல்படும் இந்த கூட்டத்தை விரட்டியடிப்போம்’’ என்று தெரிவித்துள்ளார் தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம்.