’’ஓசிமணி’’- வறுத்தெடுக்கும் பாஜக

 

’’ஓசிமணி’’- வறுத்தெடுக்கும் பாஜக

முதலில் வதந்தியை கிளப்பி விட்டு ஊசி ஓசி என்றவுடன் சத்தமில்லாமல் போட்டுச் செல்லும் தமிழகத்தின் ஓசி மணி என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை சாடியிருக்கிறார் பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில தலைவர் நிர்மல்குமார்.

’’ஓசிமணி’’- வறுத்தெடுக்கும் பாஜக

60 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன்படி பிரதமரில் ஆரம்பித்து வைகோ, கமல் என்று அரசியல் பிரமுகர்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டு வருகிறார்கள். அந்த வகையில் கி.வீரமணியும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார்.

பாஜகவுக்கும் தி.கவுக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தம்தானே. அப்படித்தான் ஊசி போட்டுக்கொண்ட கி.வீரமணி குறித்து பாஜக நிர்மல்குமார் கமெண்ட் போட, அது ஒண்ணும் ஓசி இல்லை. அது மக்களின் வரிப்பணம் என்று சிலர் எகிறிக்கொண்டு வர, அவர்களை எல்லாம் பதிலுக்கு வறுத்தெடுக்கிறது பாஜக.

’’ஓசிமணி’’- வறுத்தெடுக்கும் பாஜக
’’ஓசிமணி’’- வறுத்தெடுக்கும் பாஜக