ஸ்டாலின் பெயரில் ஒண்ணு, உதயநிதி பெயரில் இன்னொண்ணு..காதை கடிக்கும் அறிவாலயம்; முனங்கும் நிர்வாகிகள்

ஸ்டாலின் பெயரில் ஒண்ணு, உதயநிதி பெயரில் இன்னொண்ணு..காதை கடிக்கும் அறிவாலயம்; முனங்கும் நிர்வாகிகள்

சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் விருப்ப மனு வினியோகத்தை கடந்த 17ம் தேதி அன்று தொடங்கியது திமுக. சென்னையில் உள்ள அக்கட்சியில் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வந்து திமுகவினரும் அன்று முதல் ஆர்வமாக மனு வாங்கி தாக்கல் செய்து வருகின்றனர். எட்டாவது நாளான நேற்று முகூர்த்த தினம் என்பதால் அதிகம் பேர் திரண்டு வந்து விருப்ப மனு தாக்கல் செய்தனர்.

ஸ்டாலின் பெயரில் ஒண்ணு, உதயநிதி பெயரில் இன்னொண்ணு..காதை கடிக்கும் அறிவாலயம்; முனங்கும் நிர்வாகிகள்

இதில் கட்சியின் சீனியவர் நிர்வாகிகளும் வந்து விருப்பமனு தாக்கல் செய்தனர். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், காட்பாடி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார். திருவண்ணாமலையில் போட்டியிட எ.வ.வேலு, திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட கே.என்.நேரு, லால்குடியில் போட்டியிட நேருவின் மகன் அருண்நேரு, திருச்சுழியில் தங்கம் தென்னரசு, திருப்பத்தூரில் பெரியகருப்பன், ஆவுடையப்பன் அம்பாசமுத்திரம், திருவெறூம்பூரில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஸ்ரீவகுண்டத்தில் எஸ்.ஜோயல், டி.ஆர்.பி.ராஜா மன்னார்குடியில், ஆர்.கே.நகரில் சிம்லாமுத்துச்சோழன் ஆகியோர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். மணப்பாறையில் கவிஞர் சல்மா விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறார்.

ஸ்டாலின் பெயரில் ஒண்ணு, உதயநிதி பெயரில் இன்னொண்ணு..காதை கடிக்கும் அறிவாலயம்; முனங்கும் நிர்வாகிகள்

அவரவரும் தங்கள் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் போட்டியிடவும், சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி போட்டியிடவும் நிர்வாகிகள் பலரும் விருப்ப மனு தாக்கல் செய்து வருகின்றனர். இதன் பின்னணியில் இருக்கும் புலம்பல் என்ன தெரியுமா?

விண்ணப்ப கட்டணம், விருப்பமனு கட்டணம் என மொத்தம் 26 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். இதன்மூலம் கட்சிக்கு கணிசமாக வரவு வந்து சேருகிறது. மாஜி அமைச்சர்கள் உள்ளிட்ட பெரும் புள்ளிகளுக்கு 26 ஆயிரம் ஒரு பொருட்டே அல்ல. ஆனால் நடுத்தர வசதி கொண்ட நிர்வாகிகள் பாடுதான் திண்டாட்டமாக இருக்கிறது.

தங்களுக்காக விருப்பமனு தாக்கல் செய்ய வருபவர்களிடம் கவுண்டரில் இருப்பவர்கள், ‘’ உங்க பெயரில் மட்டும் மனு தாக்கல் செய்தால் போதுமா? தலைவர் பெயரிலும், சின்னவர் (உதயநிதி) பெயரிலும் மனு தாக்கல் செய்யுங்கள்’’ என காதை கடிக்கிறார்களாம்.

ஸ்டாலின் பெயரில் ஒண்ணு, உதயநிதி பெயரில் இன்னொண்ணு..காதை கடிக்கும் அறிவாலயம்; முனங்கும் நிர்வாகிகள்

‘’ இருக்கிற செலவில் இன்னும் அரை லட்சமா?’’ என முனங்கிக் கொண்டே பலரும் அப்படி செய்கின்றனர். தங்கள் பெயரில் மட்டும் தாக்கல் செய்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றே புலம்பிக்கொண்டே அவ்வாறு செய்கிறார்களாம்.