கூட்டு பலாத்காரத்தில் +2 மாணவி பலி; மூன்று இளைஞர்களுக்கு மரண தண்டனை

 

கூட்டு பலாத்காரத்தில் +2 மாணவி பலி;  மூன்று இளைஞர்களுக்கு மரண தண்டனை

பயிற்சி வகுப்பு முடிந்து வீடு திரும்பிய மாணவியை காரில் கடத்திச்சென்று கூட்டு பலாத்காரம் செய்ததில் பலியானதால் கால்வாயில் விசிச்சென்ற மூன்று இளைஞர்களுக்கு மரணம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் மாணவியின் பெற்றோர் ‘நீதிக்கு கிடைத்த வெற்றி’என்று நிம்மதி தெரிவித்துள்ளனர்.

கூட்டு பலாத்காரத்தில் +2 மாணவி பலி;  மூன்று இளைஞர்களுக்கு மரண தண்டனை

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஹாரில் பயிற்சி வகுப்பு முடிந்து வீடு திரும்பிய பிளஸ் டூ மாணவியை, சிக்கந்தராபாத் பகுதியை சேர்ந்த இஸ்ரேல், சுல்பிகர், தில்ஷா இளைஞர்கள் காரில் கடத்திச்சென்றனர்.

மாணவியை கூட்டுபலாத்காரம் செய்ததில் அவரின் பாதி உயிர் போய்விட்டது. உயிருடன் விட்டுச்சென்றால் ஆபத்து என்று கருதி, அந்த மாணவியை கொலை செய்து 40 கிலோ மீட்டர் தூரம் காரிலேயே உடலை கொன்று சென்று கிரேட்டர் நொய்டாவில் ஒரு கால்வாயில் வீசிவிட்டு சென்றுவிட்டனர்.

கூட்டு பலாத்காரத்தில் +2 மாணவி பலி;  மூன்று இளைஞர்களுக்கு மரண தண்டனை

கடந்த 2018ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் உத்திரபிரதேசம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

குற்றவாளிகள் யார் என்பதை அறிய போலீசாருக்கு முதலில் சவாலாக இருந்தது. பின்னர் கிடைத்த சிசிடிவி ஆதாரம் மூலம் குற்றவாளிகளை அடையாளம் கண்டுகொண்டனர் போலீசார்.

மூன்று பேரையும் கைது செய்து போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மூன்று ஆண்டுகள் நடந்த இந்த வழக்கின் விசாரணைக்கு பின்னர் மூன்று இளைஞர்களுக்கும் மரணம் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

தீர்ப்பினை கேட்டதும், ‘’இது நீதியின் வெற்றி’’என்று மாணவியின் பெற்றொர் சொன்னதாக, அவர்களது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.