மூணாறு நிலச்சரிவில் உயிரிழப்பு 22 ஆக அதிகரிப்பு..44 பேர் மாயம்: தொய்வின்றி தொடரும் மீட்புப்பணி!

 

மூணாறு நிலச்சரிவில் உயிரிழப்பு 22 ஆக அதிகரிப்பு..44 பேர் மாயம்: தொய்வின்றி தொடரும் மீட்புப்பணி!

கேரள மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நேற்று அதிகாலை இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் மூணாறு பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு தங்கியிருந்த 80 பேரை காணவில்லை என்றும் அவர்கள் மண்ணில் புதையுண்டு இருக்கலாம் எனவும் நேற்று காலை தகவல்கள் வெளியானது. இதனைத்தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப்படை வரவழைக்கப்பட்டு, நிலச்சரிவில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக 15 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், நிலச்சரிவில் இருந்து 14 சடலங்கள் மீட்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து மேலும் 3 சடலங்கள் மீட்கப்பட்டதால் பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரித்தது.

மூணாறு நிலச்சரிவில் உயிரிழப்பு 22 ஆக அதிகரிப்பு..44 பேர் மாயம்: தொய்வின்றி தொடரும் மீட்புப்பணி!

மீட்புப் பணியை தீவிர படுத்த கேரள முதல்வர் பினராயி விஜயன், இந்திய விமானப்படை உதவியை நாடினார். ஆனால் அங்கு பெய்து வரும் தொடர் மழையால் அந்த முயற்சி கைகொடுக்கவில்லை. அதன் பின்னர் மேலும் 100 மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டு இரவு முழுவதும் மீட்புப் பணி தொடர்ந்தது. இந்த நிலையில் இன்று காலை 5 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 44 பேரை மாயமாகி இருப்பதாகவும் அவர்களை மீட்கும் பணி தொய்வின்றி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் இறந்தவர்களுள் 9 பேர் தமிழர்கள் என நேற்று அடையாளம் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.