சென்னை தாம்பரத்தில் நடந்த மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், திமுகவிடம் இருந்து பேச்சு வார்த்தை நடத்தியதாக குறிப்பிட்டார்.

கமல்ஹாசனுடன் உதயநிதி ஸ்டாலினும், சபரீசனும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள் என்று பேச்சு இருந்த நிலையில் கமல் அதை உறுதிப்படுத்தினார்.
இதையடுத்து, ‘’திமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடந்தது. வெறும் தூதுவரை அனுப்பினால் ஏற்றுக்கொள்ளமாட்டேன். கட்சி தலைமை என்னிடம் பேசட்டும் என சொல்லும் கம்லஹாசன் அவர்களே.. உங்களிடம் தூது வந்தது யார்? மகனா? மருமகனா? என்று கேட்கிறார் தமிழக பாஜகபிரமுகர் காயத்ரி ரகுராம்.

உதயநிதி, சபரீசன் இல்லாமல் ஸ்டாலினே நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கமல் எதிர்ப்பார்க்கிறாரோ என்கிற ரீதியில்தான் கமலின் பேச்சு அமைந்திருந்த நிலையில், காயத்ரி ரகுராமும் அப்படி ஒரு பதிவினை ஷேர் செய்திருக்கிறார்.
அவர் மேலும், ‘’ ஊழலை ஒழிப்பேன் என சொல்லும் நீங்கள் ஊழலின் மொத்த உருவமான திமுகவோடு எப்படி கூட்டணி பேசுவீர்கள், பேரம் படிந்தால் ஊழல் குறித்தெல்லாம் கவலையில்லை; அப்படித்தானே?’’ என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.