Home அரசியல் ஸ்டாலின் நிச்சயம் வருத்தப்பட வேண்டியிருக்கும்.. எச்சரிக்கும் சீனியர்கள்

ஸ்டாலின் நிச்சயம் வருத்தப்பட வேண்டியிருக்கும்.. எச்சரிக்கும் சீனியர்கள்

என்றைக்கு திமுக தேர்தல் ஆலோசகராக ஐபேக் நியமிக்கப்பட்டதோ அன்று முதல் அந்த கட்சியின் இணை அதிகார மையமாகத்தான் அந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது என்று சீனியர்கள் புலம்பி வருகின்றனர். அதிமுகவுக்கு எதிராக மட்டுமே முஷ்டி உயர்த்தி வந்த திமுகவினர் அந்த கட்சியின் தேர்தல் ஆலோசகரான ஐபேக்கிற்கு எதிராகவும் கம்பு சுழற்ற வேண்டியதாக போய்விட்டது. இந்த இறுதி நேரத்தில்கூட தலைமை இதை சரிசெய்யாவிட்டால் பின்னால் நிச்சயம் வருத்தப்பட வேண்டியிருக்கும் எச்சரிக்கும் அளவுக்கு ஐபேக்கின் அதிகாரம் ஓங்கி இருக்கிறது.

ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி பிரச்சார நிகழ்ச்சிகளை பொறுப்பேற்று நடத்திவரும் ஐபேக், சின்னச் சின்ன விஷயங்களில் கூட கட்சிக்காரர்களிடம் ஏக கெடுபிடி காட்டி வருகிறது.

ஆரம்பத்திலேயே எரிச்சலடைந்த சீனியர்கள், விவகாரத்தை ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்துச்செல்லவும், ‘’ அவர்கள் ஆலோசகர்கள் மட்டுமே. கட்சியினர் மீது ஆதிக்கம் செலுத்த மாட்டார்கள்’’ என ஸ்டாலின் உறுதியளித்தார்.
கொஞ்ச நாட்களுக்கு அடங்கிக் கிடந்த ஐபேக் ஆட்கள் இப்போது மீண்டும் சாட்டையை சுழற்றத் தொடங்கியிருப்பதாக திமுகவினர் பலரும் குமுறத் தொடங்கியுள்ளனர்.

தென்மாவட்டத்தில் நடைபெற்ற ஸ்டாலின் பிரச்சார நிகழ்ச்சியில் மேடை அமைப்பது தொடர்பாக மாவட்டச் செயலாளருக்கும், ஐபேக் டீமுக்கும் இடையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டிருக்கிற து. மா.செ தரப்பில் நியாயமான காரணங்கள் இருந்தாலும் ஐபேக் அதை ஏற்றுக்கொள்ளவில்லையாம். இரு தரப்பும் அறிவாலயத்தில் புகார் வாசிக்க, ’’ஐபேக் என்ன சொல்றாங்களோ அதை செய்யுங்க’’ என அங்கிருந்து பதில் வந்திருக்கிறது.

சக சீனியர்கள் யாரைப்பார்த்தாலும் அந்த சீனியர் மா.செ. இப்போதும் இது ற்றி புலம்பிக்கொண்டிருக்கிறார்.

ஐபேக் குறித்து திமுக சீனியர்கள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வருவது குறித்து விளம்மறிய, ஐபேக்குடனான திமுக ஒருங்கிணைப்பு குழுவில் இடம்பெற்றுள்ள முக்கிய பிரமுகரை நாம் சந்தித்து பேசியபோது, ‘’திமுகவுல இருக்குறவங்க பெரும்பாலும் சீனியர்தான். எல்லோருமே அரசியல் நடவடிக்கைகளில் திமுகவினர் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் என்பது ஊருக்கே தெரிந்த விஷயம். ஆனால், இந்த மண் பற்றியோ, இங்குள்ள அரசியல் சூழல் குறித்தோ எதுவும் தெரியாத சின்ன பசங்க மூத்த கட்சிக்காரங்களுக்கு உத்தரவு போடுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?’’ என்கிறார்.

ஒரு ஊரில் மட்டும் இப்படி நடந்தால் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் அநேகமாக எல்லா மாவட்டங்களிலிருந்தும் இதே மாதிரியான புகார்கள் வந்துகிட்டிருக்குது. மற்ற மாவட்ட நிர்வாகிகளை விடுங்க. கே.என் நேரு, இன்றைக்கு கட்சியில் எந்த லெவலில் இருக்கிறார்னு அனைவருக்கும் தெரியும். அவருகிட்டையே அதை இப்படி செய்யுங்க, இதை அப்படி செய்யுங்க என்று ஆர்டர் போட்டு கடுப்பேற்றி வருகிறார்களாம்., அதனால் ஏற்பட்ட மோதலில்தான் திருச்சி மாநாடு தள்ளிப்போடப் போயிருக்கிறது’’ என்கிறார்.

’’ செய்யிற வேலைக்கு ஐபேக்கிற்கு கோடி கோடியா கிடைக்குது. அதேசமயம் ஒவ்வொரு நிகழ்ச்சியா நடத்த நடத்த, கட்சி நிர்வாகிகளோட பாக்கெட்தான் காலியாகிட்டு வருது. மொத்தத்தில் நான் அறிந்தவரை கட்சி நிர்வாகிகள் பலரும் ஐபேக் மீது அதிருப்தி என்று சொல்லமாட்டேன். ஆத்திரத்தில் இருக்கிறார்கள். இந்த இறுதி நேரத்தில்கூட தலைமை இதை சரிசெய்யாவிட்டால் பின்னால் நிச்சயம் வருத்தப்பட வேண்டியிருக்கும்’’என்று எச்சரிக்கிறார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

மீண்டும் அதிமுக கொடியுடன் அறிக்கை வெளியிட்ட சசிகலா!

சசிகலாவை அதிமுக கர்நாடக மாநில செயலாளர் யுவராஜ் சந்தித்து பேசினார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் முகாம் அலுவலகத்திலிருந்து அறிக்கை வெளியிட்டுள்ள...

குன்னூர் அருகே நாட்டுவெடி வெடித்து விபத்து – தொழிலாளி படுகாயம்

நீலகிரிது குன்னூர் அருகே காட்டுப்பன்றிகளை தடுக்க வைத்திருந்த நாட்டுவெடிகள் வெடித்து சிதறியதில் தொழிலாளி படுகாயம் அடைந்தார். நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த...

உதயநிதியை முதல்வராக்குவதே ஸ்டாலினின் சிந்தனை – அமித்ஷா

விழுப்புரத்தில் சிங்காரவேலர் சிலைக்கு அடிக்கல் நாட்டி, உருவப்படத்தை திறந்து வைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மரியாதை செலுத்தினார் அதன்பின் அங்கு நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில்...

கோயில் திருவிழாவில் தொழிலாளி மீது தாக்குதல் – 5 பேர் கைது

தென்காசி தென்காசி அருகே கோவில் திருவிழாவில் தொழிலாளியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த 5 பேரை போலீசார் கைதுசெய்தனர். தென்காசி மாவட்டம்...
TopTamilNews