அவரின் துணிச்சலை கொண்டாடுவதே பாசிசத்திற்கு சாவு மணியடிக்கும்.. திருமுருகன் காந்தி

அவரின் துணிச்சலை கொண்டாடுவதே பாசிசத்திற்கு சாவு மணியடிக்கும்.. திருமுருகன் காந்தி

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த சூழலியல் ஆர்வலர் டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த டூல்கிட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த டூல்கிட் தொடர்பாக பெங்களூருவை சேர்ந்த சூழலியல் ஆர்வலர் திஷாரவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரின் துணிச்சலை கொண்டாடுவதே பாசிசத்திற்கு சாவு மணியடிக்கும்.. திருமுருகன் காந்தி

இதன்பின்னர் நீதிமன்ற விசாரணையில் திஷா ரவி பேசியது குறித்து, ‘உழவர் போராட்டத்தை உலகறிய செய்வது தேசத்துரோகமெனில் நான் சிறையில் இருக்கவே விரும்புகிறேன்’ என துணிச்சலோடு நீதிமன்றத்தில் சொல்லி இருக்கிறார் 22 வயது திஷாரவி. புரட்சிகர வாழ்த்துகள் சொல்வோம் என்கிறார் மே-17 இக்கத்தின் திருமுருகன் காந்தி.

அவரின் துணிச்சலை கொண்டாடுவதே பாசிசத்திற்கு சாவு மணியடிக்கும்.. திருமுருகன் காந்தி

ஐ.நாவில் உபா, தேசத்துரோக வழக்குகள் சனநாயக விரோதமானவை என்றதற்காக அதே பிரிவில் மோடி அரசு, கைது செய்தபோது, ‘இதே சட்டங்களில் என்னை சிறையில் அடைக்குமெனில், இக்கருப்பு சட்டங்களை சர்வதேச அளவில் அம்பலப்படுத்தும் வாய்ப்பாக இதே பிரிவுகளில் சிறை செல்வது எனக்கு மகிழ்ச்சி’ என 2018இல் நான் நீதிமன்றத்தில் சொன்னபோது அஞ்சி விலகிய நண்பர்களை அறிந்தவனென்கிற முறையில், வழக்கு-சிறை நெருக்கடியிலும் இப்படி துணிச்சலாக இப்பெண் முழக்கமிடும் போது இந்த இளம்பெண் தனிமைப்படாமல் இவருக்கு துணை நின்று அவரின் துணிச்சலை கொண்டாடுவதே பாசிசத்திற்கு சாவு மணியடிக்கும் என்று சொல்லிவிட்டு, . திஷாரவியை கைவிடாமல் துணை நிற்போம், புரட்சிகர வாழ்த்துகளை தெரிவிப்போம் என்கிறார்.