செங்கோட்டையில் மதக்கொடி ஏற்றிய இளைஞர் கைது

 

செங்கோட்டையில் மதக்கொடி ஏற்றிய இளைஞர் கைது

செங்கோட்டையில் மதக்கொடி ஏற்றிவைத்து பதற்றத்தை ஏற்படுத்தியை இளைஞர் கை செய்யப்பட்டார்.

செங்கோட்டையில் மதக்கொடி ஏற்றிய இளைஞர் கைது

மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியை நடத்தினர். இதில் வன்முறை வெடித்ததால் போராட்டம் திசைமாறியது. போலீசார் கடும் தாக்குதலை நடத்தினர். அப்போது சிலர் டெல்லி செங்கோடைக்குள் நுழைந்து கோட்டையின் குவி மாடங்களிலும், கோபுரங்களிலும் மதக்கொடிகளை ஏற்றினர்.
வாள்களை தலைக்கு மேல் தூக்கி பிடித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் பெரும் சர்ச்சை எழுந்தது.

செங்கோட்டையில் மதக்கொடி ஏற்றிய இளைஞர் கைது

சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்த நிலையில்,கோட்டையில் ஏறி நின்று வாள்களை அசைத்து மிரட்டல்விடுத்தவர் மனிந்தர்சிங் என்பது தெரியவந்ததை அடுத்து அவர் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

செங்கோட்டையில் மதக்கொடி ஏற்றிய இளைஞர் கைது

மனிந்தர் சிங்கிடம் நடத்திய விசாரணையில் அவனது கூட்டாளிதான் ஜஸ்பிரீத் சிங் தான் கொடியேற்றியவர் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் வடமேற்கு டெல்லியில் உள்ள ஸ்வரூப் நகரில் வசித்து வந்த ஜஸ்பிரீத் சிங் கைது செய்யப்பட்டார்.