தாமரை – இரண்டு இலைகள் கலவைதான் நல்ல வளர்ச்சியை தர முடியும்… ராஜ்நாத்சிங்

 

தாமரை – இரண்டு இலைகள் கலவைதான் நல்ல வளர்ச்சியை தர முடியும்… ராஜ்நாத்சிங்

சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பாஜக இளைஞரணி சார்பில் நடந்த தாமரை இலை சங்கமம் மாநில மாநாட்டில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

‘வெற்றி வேல் வீரவேல்’ என்று முழக்கத்துடன் தான் அவர் தனது உரையை தொடங்கினார்.

தாமரை – இரண்டு இலைகள் கலவைதான் நல்ல வளர்ச்சியை தர முடியும்… ராஜ்நாத்சிங்

சேலம் மாநாட்டில் தான் பங்கேற்றது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ’’நன்றி சேலம்! இன்றைய மாநில மாநாடு தமிழகத்தில் மக்களின் மனநிலையைக் குறிக்கிறது. பாஜகவின் ’வெற்றிவேல் யாத்திரை’ வெற்றி தமிழ்நாட்டில் திமுக & காங்கிரஸை உலுக்கியுள்ளது. ‘தாமரை’ மற்றும் ‘இரண்டு இலைகள்’ ஆகியவற்றின் கலவையால் மட்டுமே இந்த மாபெரும் நிலத்திற்கு வளர்ச்சியையும் செழிப்பையும் தர முடியும்’’என்று தெரிவி்த்துள்ளார்.

Thank you Salem! Today’s State BJYM Convention indicates the people’s mood in Tamil Nadu. The success of BJP’s ‘Vittrivel Yatra’ has shaken DMK & Congress in Tamilnadu. Only the combination of ‘Lotus’ and ‘Two Leaves’ can bring development and prosperity to this great land.

தாமரை – இரண்டு இலைகள் கலவைதான் நல்ல வளர்ச்சியை தர முடியும்… ராஜ்நாத்சிங்

மேலும் அவர் தமிழ், தமிழ்நாடு குறித்த பெருமையை தமிழிலேயே தனது டுவிட்டர் பக்கத்தில்,’’உலகின் மிக பழமையான மற்றும் அழகியல் நிறைந்த மொழியாக திகழ்கிற தமிழ் மொழியின் பிறப்பிடமாய் விளங்கும் தமிழ்நாட்டின் பால் எப்போதும் எனக்கு ஈர்ப்பும் விருப்பமும் உண்டு. தமிழ் மொழி பழமையானது மற்றும் ஆழகானது மட்டுமல்ல இதுவே மற்ற இந்திய மொழிகளின் தாயாக, மூலமாக விளங்குகிறது.’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.