ஓபிஎஸ்க்கு நன்றி சொல்ல திரண்டு வந்த மக்கள்; பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ஓபிஎஸ்க்கு நன்றி சொல்ல திரண்டு வந்த மக்கள்; பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

பட்டியல் சாதி பிரிவில் இருந்த 7 உட்பிரிவுகளை உள்ளடக்கிய தேவேந்திரகுல மக்களை தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்குமாறு தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டங்கள் நடந்து வருகின்றன.

ஓபிஎஸ்க்கு நன்றி சொல்ல திரண்டு வந்த மக்கள்; பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் தலைவர் ஜான்பாண்டியனும் பல்வெறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தார்.

இவர்களின் கோரிக்கையினை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மத்திய அரசுக்கு பரிந்துரைத்தனர்.

ஓபிஎஸ்க்கு நன்றி சொல்ல திரண்டு வந்த மக்கள்; பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

இதையடுத்து, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த அரசு விழாவில் பேசிய பிரதமர் மோடி, நடப்பு கூட்டத்தொடரிலேயே 7 உட்பிரிவுகளையும் தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க மசோதா நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார்.

ஓபிஎஸ்க்கு நன்றி சொல்ல திரண்டு வந்த மக்கள்; பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

இதன்பின்னர் தேவேந்திரகுல வேளாளர் அரசாணை வெளியிட்ட மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தும், இதற்காக உதவிய முதல்வருக்கும், துணைமுதல்வருக்கும் நன்றி தெரிவிக்கவே தேனியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை 7 பிரிவினரும் திரண்டு வந்து சந்தித்தனர். தேனி எம்.பி. ரவீந்திரநாத்துக்கும் நன்றி தெரிவித்தனர்.

பின்னர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கோஷங்கள் எழுப்பியும் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர்.